பட்டணத்திலுள்ள மிகவும் மோசமான பாவி THE WORST SINNER IN THE CITY Minneapolis Minnesota U.S.A. 56-02-18E எனக்குப் பிடித்த பாடல்... அதனுடைய பின்னணி, அது என்ன மற்றும் அந்தப் பாடல் எப்படி வந்தது என்பது மட்டும் உங்களுக்குத் தெரியுமானால்... என் நண்பரான சகோதரர் பூத் கிளிப்போர்ன் (Brother Booth Clibborn) ஒரு இரவு நேரத்தில், சோளக் காட்டில், முழங்காலில் நின்று ஒரு ஏவுதலோடு அதை எழுதினார். தன்னுடைய ஒட்டுப் போடப்பட்ட அடிப்பகுதியைக் கொண்ட காலணியை (shoes) உடையவராய், அதை நூறு என்பவருக்கு விற்று, வைகிளிஃப் (Wycliffe) டாலருக்கு அப்பாடலின் பதிப்புரிமையைப் பெற்றுக்கொண்டார். அது எனக்கு விருப்பமான பாடலாகும். விசேஷித்த விதமாக, இப்படிப்பட்டதான நாளில், அவரை ஒரு சாதாரண தீர்க்கதரிசியாக பாவிக்க முயற்சிக்கும் வேளையில், அது (அந்தப் பாடல்) கர்த்தராகிய இயேசுவின் உயரிய தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்துகிறது. அவர் தீர்க்கதரிசிக்கும் மேலான ஒருவராயிருந்தார். அவர் தேவனாயிருந்தார். 2. இன்றிரவிற்கான பாடத்திற்கு, வேதாகமத்தில் பரிசுத்த லூக்கா 7-ம் அதிகாரம் 36-ம் வசனம்... நீங்கள் வீட்டிற்குச் செல்லும் போது, இந்த அதிகாரத்தை முழுவதும் படியுங்கள். நாளையதினம் ஞாயிற்றுக் கிழமையாக இருப்பதால், நான் இதை நாம் வாசித்து செல்கிறேன். வெறுமனே அதிக நேரம் தரித்திருக்க வேண்டியதில்லை. ஆனால் நாம்... நாளையதினம் ஞாயிறு பாடப்பள்ளி மற்றும் நிறைய ஆராதனைகள் உங்களுக்கு இருக்கிறது. மேலும் இங்கே நான் வருகை தந்தபோது, உண்மையாகவே நான் சந்திக்க விரும்பின நல்ல நண்பர்கள் அநேகர் இருந்தார்கள், இங்கே இருக்கிற ஸ்டெட்களெவ்ஸ் (Stadskives), பீட்டர்ஸன்ஸ் (Petersons) முதலானோர். ஆனால், பிரசங்கிக்கும் ஆராதனைகளைக் குறித்து என்னுடைய காரியம் என்னவெனில், நான் எங்கெல்லாம் செல்கிறேனோ, அது சுகமளிக்கும் ஆராதனையை துவக்குகிறது போலக் காணப்படுகிறது. எனவே, சுகமளிக்கும் ஆராதனையில் இருக்கும் போது, என்னால் அவர்களை சந்திக்க முடிவதில்லை. நான் எனது நேரத்தை உபவாசத்திலும் கர்த்தருக்காக காத்திருத்தலிலும் செலுத்த வேண்டியுள்ளது. நிச்சயமாக எனது நண்பர்கள் இதைப் புரிந்து கொள்வார்கள், எனவே... 36-ம் வசனம், இதை வாசிப்போம். பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம் பண்ண வேண்டுமென்று அவரை வேண்டிக் கொண்டான்; அவர் அந்த பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார். நாம் ஜெபிப்போமா? பரலோகப் பிதாவே! உம்முடைய மகிமைக்காக இந்த வார்த்தைகளை நீர் ஆசீர்வதிக்கும்படியாக நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம், ஆமென். 4. அங்கே ஏதோ ஒரு விஷயம் தவறாகக் காணப்படுகிறது. அது மிகவும் சரியானதாக தென்படவில்லை. ஒரு பரிசேயன் எதற்காக இயேசுவை தன்னுடன் போஜனம் பண்ணும்படி கேட்டுக்கொள்ள வேண்டும்? நல்லது. அது - அது சரியானதாக இல்லை. ஏனெனில், பரிசேயர்களுக்கு இயேசுவை பிடிக்காது; அவர்கள் அவரை வெறுத்தார்கள். அவர்கள் அவரிடம் எந்தவித பரிமாற்றங்களும் எப்பொழுதும் வைத்து கொள்வது கிடையாது. வழக்கமாகவே, யாராவது நமக்கு தேவைப்படும் பொழுது, யாரையாவது நாம் நேசிக்கும் பொழுது, நாம் அவர்களை நம்முடன் வந்து போஜனம் பண்ண வேண்டும் என்று விரும்புவோம். ஆனால், நீங்கள் உங்கள் பகைஞர்களை உங்களோடு வந்து போஜனம் பண்ணும்படி கேட்டுக் கொள்ள மாட்டீர்கள். ஆகவே, இந்த காட்சியில், இந்த பரிசேயன், இயேசுவை தன்னுடன் வந்து போஜனம் பண்ணும்படி கேட்டதில் ஏதோ ஒரு தவறான காரியம் உள்ளது. மேலும், வழக்கமாக நமக்குத் தேவையானது, ஐக்கியமே. பரிசேயர்களுக்கு இயேசுவோடு ஐக்கியம் இருந்ததில்லை, ஏனெனில், அவர்கள் கடினமும், விறைப்புமுள்ள மதவைராக்கியம் கொண்ட குழுவினர். ஆனால் இயேசுவோ, தேவனுடைய நேசகுமாரனாயிருந்தார். உங்களுக்குத் தெரியும், வாலிபப் பெண்கள் ஒன்றாகக் கூடிக் கொள்வார்கள்; அவர்களுக்கென்றே பேசக்கூடிய விஷயங்கள் இருக்கும். இளம்பிராய ஸ்திரீகள் ஒன்றாக கூடவிரும்புவார்கள். வயதான ஸ்திரீகள் ஒன்று கூடி தங்கள் நேரத்தை செலவழிப்பார்கள். அவர்கள் ஒன்றுகூடி தங்களுக்குள் சகவாசம் செய்ய விரும்புவார்கள். மேலும், வாலிபப் பையன்கள், வயதான புருஷர்கள்... சிறு குழந்தைகள், தங்களுக்குள்ளாக ஐக்கியம் கொண்டிருப்பார்கள். அவர்கள் தெருக்களில் ஒன்று கூடி விளையாடுவார்கள். ஏசாயா புஸ்தகத்தில் வேதாகமம் அதைக் குறித்து கூறுகிறது. குழந்தைகள் தெருக்களில் ஒன்று கூடி விளையாடுவார்கள். 5. ஆனால், இந்த பரிசேயனுக்கு இயேசுவுடன் என்ன வேண்டியுள்ளது? உங்களுக்குத் தெரியும், ஒரு சிறு பிள்ளையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறுபிள்ளை எல்லா நேரங்களிலும் தன்னுடைய பாட்டியையே சுற்றி வருவாளானால், அங்கே ஏதோ ஒன்று தவறாக இருக்கிறது. அவர்களிடையே வயது வித்தியாசம் அதிகமாக இருக்கும், அவர்களுக்கென்று பொதுவான காரியம் எதுவும் இருக்காது. ஒன்று, அவள் பாட்டியின் செல்லப் பிள்ளையாக இருக்கலாம், அல்லது பாட்டி ஒரு பை நிறைய மிட்டாயை எங்காவது வைத்திருக்கலாம். ஒரு சிறு பிள்ளை அவளுடைய பாட்டியை சுற்றி வருவாளானால், அங்கே ஏதோ ஒரு தந்திரம் இருக்கிறது (there is something up the sleeve). 6. மேலும், நீங்கள் ஜனங்கள் ஒன்றாகக் கூடுவதைக் காண்கிறீர்கள், நகரத்தில் கிவானியர் குழு (Kiwanis) கூடுவதைப் போல. அவர்கள் கூடிவரும் போது, அவர்களுக்கு பொதுவான விஷயங்கள் இருக்கும். அவர்கள் நகரத்துச் செய்திகளைப் பற்றியும், ஏழைகளுக்கு அளிக்கப்படும் நிவாரணம் பற்றியும் பேசுவார்கள். ஒவ்வொருவரும்... என்னுடைய தாயார், ஒரு பழமொழியை வழக்கமாக சொல்வதுண்டு: "ஒரே சிறகுள்ள பறவைகள் ஒன்று கூடும். அதில் அதிகமான உண்மை உள்ளது. ஏனெனில், நம்மிடத்தில் பொதுவான விஷயங்கள் உள்ளன. அதனால்தான் நாம் இன்றிரவு இங்கிருக்கிறோம். நமக்கு பொதுவான விஷயங்கள் உண்டு நாம்.... நீங்கள் படக்காட்சிகளுக்கோ அல்லது அதற்கொத்த வேறெதற்கோ செல்லாமல் இருப்பதற்கான காரணம், நீங்கள்... நாம் கிறிஸ்தவர்கள் என்ற முறையில் பொதுவான விஷயங்களைப் பெற்றிருக்கிறோம். நாம் தேவனுடைய வார்த்தையை மையமாகக் கொண்டு ஐக்கியத்திற்கு வருவது, கர்த்தராகிய இயேசுவைப் பற்றி பேசுவது போன்றவைகள். 7. ஆனால், இந்தப் பரிசேயனுக்கு இயேசுவிடம் என்ன வேண்டியிருந்தது? அது தான் அடுத்த காரியம். நேரமாகிக் கொண்டே இருந்தது. சூரியனும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. மேற்கு அடிவானம் இருள் கவ்வ அஸ்தமனம் ஆவதற்கு துவங்கின வேளையில், அந்த அஞ்சல்காரன் (courier), ஓடிவந்த அவன் அங்கே நின்று கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. பாலஸ்தீனா வழியாக, இரண்டு நாள் பிரயாணமாக அவன் வந்திருந்தான், தேடி வந்ததை கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். அவன் பட்டணத்திற்குள் சென்றான். "நல்லது, அவர் ஒரு வாரத்துக்கு முன்பு இங்கிருந்தார், ஆனால், இப்பொழுது போய்விட்டார்." எனவே, நாம் இப்பொழுது அவனை, எந்தவொரு மனிதனும் இதுவரைக்கும் பேசியிராததை பேசிக் கொண்டிருந்த ஒரு மனிதரின் பேச்சை கவனிக்கும்படியாக அங்கே குழுமியிருந்த ஜனக்கூட்டத்திற்கு வெளியே நிற்பதாக காண்கிறோம். அவர் அதிகாரத்துடன் பேசினார். அவர் பேசிக்கொண்டிருந்தார். இந்த தூதுவன், பரிசேயனாகிய அந்த செல்வந்த எஜமானனுக்காக தூது கொண்டு செல்லும் பணியில், நசரேனாகிய இயேசு எங்கிருக்கிறார் என்று அவரை தேடி, ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்துக்கு சென்று, பாலஸ்தீன கரடுமுரடான பாதைகளில் ஓடினதால் தூசி படிந்த கால்களோடு நின்று கொண்டிருந்தான். 8. இயேசு பேசுவதை நிறுத்திய பின்பு, அநேகமாக, அவர் வியாதியஸ்தர்களுக்கான ஜெபக்கூட்டத்தை துவக்கியிருப்பார். முடவர், பலவீனர், குருடர் போன்றோரை தொடும்படி அவர் தமது பரிசுத்த கரங்களை விரிப்பதை நான் காண்கிறேன். தூது கொண்டுவந்த இந்த சிறு பையன், பரிசேயனுக்காக ஓடுகிற அவன், கூட்டத்தை தனது முழங்கையால் தள்ளிவிட்டு, இயேசுவை தொடர்பு கொள்ள முடிகிற இடத்திற்கு முன்னேறுகிறதை நான் காண்கிறேன். அநேக ஜனங்கள் அவனை பின்னாகத் தள்ள முயற்சித்தனர். ஆனால், சிறிது நேரத்துக்குப் பின்னர், அவன் இறுதி வரிசைக்கு வருகிறான். அங்கே பன்னிரண்டு அப்போஸ்தலர்கள், அவர்களைத் தவிர வேறுயாரும் கர்த்தராகிய இயேசுவை நெருங்க விடாமல் தடுக்கும் நோக்கில் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். அவன் யாரோ ஒருவரோடு மோதினான், அது பிலிப்பாகவோ அல்லது பேதுருவாகவோ இருந்திருக்கலாம். அவன், "உங்கள் எஜமானரை நான் பார்க்கக் கூடுமா? என்னுடைய எஜமானிடத்திலிருந்து அவருக்கு ஒரு செய்தி உள்ளது" என்று கூறினான். அதற்கு அந்த அப்போஸ்தலன், "நல்லது, அவர் இப்போது பேசிக் கொண்டிருக்கிறார். சுகமளிக்கும் ஆராதனையை அவர் முடிக்கும் போது நான் அவரிடம் கேட்கிறேன்" என்றான். சுகமளிக்கும் ஆராதனை நீண்டு கொண்டே சென்றதால், சிறிது நேரம் கழித்து, வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதை நிறுத்தும்படியான நேரம் ஆகிவிட்டது என்று நினைத்தார்கள். அவர்களில் சிலர் "எஜமானரே, நாம் இப்பொழுது இந்த வரிசையை நிறுத்திவிட வேண்டும் என நான் நினைக்கிறேன். ஏனெனில், இன்றைக்கு இது போதும். நமக்கு போக வேண்டிய பிற இடங்களும் உள்ளது" என்று கூறினர். அதன் பின்பு பேதுரு, "அவர் உன்னோடு பேசுவாரா என்று இப்பொழுது நான் அவரை கேட்கட்டும்" என்றான். எனவே அவன், "போதகரே, இங்கு நமது பார்வையாளர்களில் ஒரு இளைஞன் தெற்கு பாலஸ்தீனத்திலிருந்து வந்துள்ளான். அவன் இரண்டு நாட்கள் பயணமாக வந்துள்ளான். அவன் தன் எஜமானிடமிருந்து உமக்கொரு செய்தியைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறுகிறான். இப்பொழுது அவனுடன் நீர் பேச இயலுமா?" என்று கேட்டான். நீங்கள்தான் இயேசுவோடு பேசும்படி ஒருபோதும் கேட்பதில்லை, மற்றபடி அவர் எப்போதும் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறார். அவர் இப்போது இருப்பது போலத்தான் அப்பொழுதும் இருந்தார். ஏனெனில், அவர் ஒவ்வொரு நபரோடும் உரையாடல் நடத்த (interview) ஏங்கிக் கொண்டும், காத்துக் கொண்டும் இருக்கிறார். நீங்கள் எந்த பணியில் இருந்தாலும், அல்லது உங்களுடைய பிரச்சனை எதுவாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. நமது அன்பான அன்பான கர்த்தராகிய இயேசு எப்போதும் ஒவ்வொருவருடனும் பேசக்கூடிய வாய்ப்பை பெறும்படி காத்துக் கொண்டும் முயற்சித்துக் கொண்டும் இருக்கிறார். ஆகவே நிச்சயமாக, தான் கொண்டிருந்ததை காணும்போது அவர் மகிழ்ச்சியடைவார் என்று அவன் கூறினான். 9. இந்த இளைஞன் நடந்து போய், "நீர்தான் நாசரேத்தின் இயேசுவா? பட்டணத்திலுள்ள என்னுடைய எஜமான் மருத்துவரான பரிசேயன், ஒரு பெரிய விருந்து ஒன்றை ஆயத்தப்படுத்தப் போகிறார். அந்த விருந்தில் அவருடைய விருந்தினராக இருக்கும்படி நீர் வரவேண்டும் என்று அவர் விரும்புகிறார்" என்று கூறினான். எல்லா அப்போஸ்தலர்களுடையக் கண்களும் அவர் மேல் நோக்கமாயிருப்பதை என்னால் காண முடிகிறது. அவர் என்ன சொல்லப் போகிறார்? அவர், "நான்... உன்னுடைய எஜமானிடம், குறிப்பிட்ட தேதியில் அங்கு இருப்பேன் என்று சொல்" என்றார். கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். எப்பொழுதும் இயேசுவோடு பெற்றுக் கொள்வீர்கள். அவர், "குறிப்பிட்ட தேதியில் நான் அங்கு இருப்பேன்" என்றார். அப்பொழுது பேதுரு, "ஓ, வேண்டாம். நீர் அங்கு போக வேண்டாம். பரிசேயர் ஏதோ சூழ்ச்சியை வைத்திருப்பார்கள். அவர்கள் எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் உம்மை அழைக்க மாட்டார்கள். ஏன், இங்கே ஊழியம் செய்வதற்கு அநேக வியாதியஸ்தர்கள் இருக்கிறார்களே, உம்மை நேசிக்கக் கூடிய மக்கள், உம்மோடு ஒரு கணமாவது இருக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் நோக்கில், உம்மை சுற்றிலும் கூட்டமாக உள்ளனரே. ஏன், அந்த பரிசேயனிடத்தில் நீர் போக வேண்டியதில்லை" என்று கூறினதை என்னால் கேட்க முடிகிறது. தங்களது விருப்பத்திற்கு அவர் என்ன பதில் கொடுப்பார் என்று ஒருவரும் அவரை வினவினதில்லை. அவரோ, "நாம் அங்கே போகலாம்" என்று கூறினார். 10. இந்த அழைப்பை கொண்டுவந்த இளைஞன் (runner), செல்வந்தனான பரிசேயனுடைய வீட்டிலிருந்து வந்த கூலிக்காரன், நல்லது, அவனது பணி முடிந்துவிட்டது. தூது பின்னர், அவன் இயேசுவினிடமிருந்து திரும்பி, தன் பாதையில் தாம் எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டோம் என்ற திருப்தியான உணர்வோடு வீட்டிற்குத் திரும்பினான். ஏனெனில், அவன் தன் எஜமானனுடைய விருப்பத்தை எடுத்துச் சென்றான். அந்த மனிதன் நித்திய ஜீவனின் பிரசன்னத்தில் நின்று கொண்டிருந்தும், பரலோகத்தின் தேவன் முன்னிலையில் நின்று கொண்டிருந்தும், அவனுடைய மதத்திற்குரிய மற்றும் சபையின் கடமைகள் எல்லாவற்றையும் செய்த பிறகு, தன்னுடைய பாவங்களுக்கு மன்னிப்பு கூட கேட்காமல் நடந்து சென்றுவிட்டான். என்னே ஒரு தவறு! 11. அவன் நின்ற இடத்தில் நானும் நின்றிருக்க விரும்புகிறேன். அவன் எந்த இடத்தில் நின்று கொண்டிருந்தானோ அதே இடத்தில் நானும் நின்றிருக்க விரும்புகிறேன். நான் என்ன செய்வேன் என்று உங்களுக்கு தெரியுமா? ஓ, நான் சபைக் காரியங்களில் அவ்வளவாக ஆர்வம் காண்பித்திருக்க மாட்டேன். நான் முகங்குப்புற விழுந்து, 'அன்புக்குரிய கர்த்தராகிய இயேசுவே, ஜீவனின் அதிபதியே, உம்முடைய மன்னிக்கும் கிருபையை எனக்குத் தந்தருளும்" என்று கேட்டிருப்பேன். எனக்கு மாத்திரம் அவருக்கு முன்பாக நிற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால். அத்தகைய உணர்ச்சியே இன்றிரவு இங்குள்ள எல்லோருக்கும் இருக்குமென்று நான் நம்புகிறேன். நாம் அதே காரியத்தைச் செய்வோம். நான்... அன்றைக்கு இருந்தது போலவே இன்றைக்கும் இருக்கிறது. உண்மையாகவே அநேக முறைகள் பெற்றுக் கொண்ட வாய்ப்புகளை நாம் தவறவிடும் அளவிற்கு, செய்வதற்கென்று சபையிலுள்ள அநேக விஷயங்களோடு நாம் நம்மை உள்ளாக்கிக் கொள்கிறோம், சபைக்கு நாம் அதிகமாக தேவைப்படுகிறோம், செல்வதற்கும் நிறைய இடங்களைப் பெற்றிருக்கிறோம். ஒருவேளை, பாடல் ஆராதனைக்காக சில இரவுகள் நாம் பயிற்சி பெற வேண்டியிருக்கலாம். நாம் வேறு ஏதாவது செய்ய வேண்டியிருக்கலாம். வேறு ஏதாவது மத சம்பந்தமான விஷயம் இருக்கலாம். ஆனால், பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயங்களில் பேசும்போது, நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம் என்னவெனில், எப்போதும் பதிலளியுங்கள், என்னவாக அது இருந்தாலும் பரவாயில்லை, இரவின் எந்த நேரமாக இருந்தாலும் பரவாயில்லை அல்லது நீங்கள் எந்த விதமான தூதை கொண்டு செல்லும் பணியில் இருந்தாலும் பரவாயில்லை. ஏனெனில் வெகுகாலத்திற்கு அவர் உன்னோடு பேசாமல் போகலாம் அல்லது ஒருவேளை இனி எப்பொழுதுமே பேசாமலும்கூட போகலாம். 12. ஆனால், இந்த இளைஞன் நித்திய ஜீவனுக்கு மிக அருகில் வந்து நின்றிருந்தும், அவன் அதை ஒருபோதும் கேட்கவே இல்லை. நல்லது, நாம் அவனை குற்றப்படுத்துகிறோம். ஆனால் உங்களுக்குத் தெரியுமா? அநேகமாக நீங்களும் நானும் கூட அதே மாதிரியான குற்ற உண ணர்வில் இருக்கலாம். நித்திய ஜீவனின் வாயில் வரை அல்லது கேட்கும் தூரத்தில் நித்திய ஜீவனுக்கு அருகில் நின்று, அதை கவனித்து, அதை நோக்கிப் பார்த்து, அவன் செய்தது போலவே எதையும் செய்யாமல் நாமும் அதிலிருந்து விலகிச் செல்கிறோம், அது சரியே. நாமும் மற்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு கொள்கிறோம். இன்றைக்கு அநேக ஜனங்கள் அநேகக் காரியங்களை, செய்யும்படியாக கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கடைகளுக்கு செல்ல வேண்டும் (shopping). நீங்கள் அவசரமாக இதை அதை செய்ய வேண்டியுள்ளது. நாம் வெறுமனே அவசரம், அவசரம், அவசரம் என்று அவசரப்படுகிறோம், ஆனால் நாம் எல்லா செல்வதில்லை, எங்கேயும் நேரங்களிலும் தேவனிடத்திலிருந்து தூரமாகப் போய்விடுகிறோம். இப்பொழுது, நல்லது... ஆனால், அவன் செய்ய வேண்டியதெதுவோ, அவை எல்லாவற்றையும் சரியாக செய்து முடித்ததாகவும், செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவுதான் என்பதாகவும் எண்ணினான். நிறைய தருணங்களில், நாம் சபைக்கு வந்து, நமது பெயரை அங்குள்ள காகிதத்தில் கையெழுத்திட்டு, போதகருடன் கைகுலுக்கி, தண்ணீரில் ஞானஸ்நானம் பெற்று, பின்னர், "நாம் இப்போது நமது மதத்துக்குச் செய்ய வேண்டியதை செய்து விட்டோம்" என்று எண்ணுகிறோம். ஆனால், நீங்கள் முக்கியமான ஒரு விஷயத்தை விட்டுவிடுகிறீர்கள்- அது கர்த்தராகிய இயேசுவிடம் பேசுவது. அநேக தருணங்களில் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தும், நீங்கள் அதைச் செய்வதில்லை. 13. அந்த இளைஞனை அவ்வாறு செய்ய வைத்தது எது என்று நான் வியக்கிறேன். ஒருவேளை, ஒரு வாரத்திற்கு முன்பதாக, வேறொரு நகரத்தில், யூதர்களின் மகத்தான ஒரு ஜெப ஆலயக் கூடுகையில், அங்கே ஒரு போதகர் இருந்தார்... நாம் அவரை டாக்டர் பரிசேயன் என்ற பெயரில் அழைப்போம். அவர் அந்த பெரிய அறையில் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருக்கிறதை என்னால் காண முடிகிறது. தரையில் விரிக்கப்பட்டுள்ள உயரிய கம்பளங்கள், அருமையான மரசாமான்கள் உள்ள வீட்டில், தன்னுடைய தடிமனான, குண்டான கரங்களை பிசைந்துக் கொண்டு, "நல்லது, நான் இந்த நகரத்திலுள்ள மதிப்பிற்குரிய ஒருவனாயிருக்கிறேன், நான் ஒரு - ஒரு பட்டத்தைப் பெற்றுள்ளேன், இளங்கலை பட்டம். நான் 'முனைவர்' என்று அழைக்கப்படுகிறேன். ஒவ்வொருவரும், நான் பட்டணத்திற்குச் செல்லும் போது, என்னை எல்லோரும் 'டாக்டர் பரிசேயன்' என்று கருதுகிறார்கள். 'காலை வணக்கம், டாக்டர் பரிசேயன்.' ஓ, நான் நிறைய விடுதிகள், மற்றவற்றுக்கும் தலைவராக உள்ளேன். சங்கங்கள் கூடும் போது அவர்கள் என்னை பேசும்படி அழைப்பார்கள். நான் வாக்கு சாதுரியம் உள்ள ஒரு சிறந்த பேச்சாளரும் கூட. மேலும், பட்டணம் முழுவதுமே என்னை கவனிக்கிறது" என்று கூறினான். இதில் நிறைய "நான்" இருக்கிறது. "நான், நான், நான், நான்." 14. இங்கே, சில காலத்திற்கு முன்பாக ஒரு மிகச்சிறந்த ஊழியக்காரர், அரை பக்கத்துக்கும் சற்று குறைவாக எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் இருபத்திரண்டு முறைகள் "நான்" என்ற வார்த்தை இருந்தது. "நான், நான், நான், நான், நான் இதைப் பெற்றிருக்கிறேன், நான் அதைப் பெற்றிருக்கிறேன்.' மொத்தத்தில் எப்படியிருந்தாலும், தேவன் கொடுக்காத எதையும் நீங்கள் பெற்றிருக்கவில்லை. எனவே நீங்கள், இயேசு உள்ளே வரும் இடத்தை கண்டிப்பாய் நீங்கள் காண வேண்டும். கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு பட்டணத்திற்கு நான் ஒருமுறை சென்றிருந்தேன். அந்தப் பட்டணம் முழுவதும் அந்த ஊழியரின் படங்களே இருந்தன. "இந்த மணிநேரத்தின் மனிதர், இவற்றிற்கான தேவ மனிதன், ஜனங்களுக்காக பாரத்தோடு உள்ள மனிதன்" என்றெல்லாம் இருந்தது. ஆனால், எந்த இடத்திலும் நான் இயேசுவின் பெயரை காணவில்லை. "ஏன், இயேசு ஒருவேளை பட்டணத்திற்கு வரவில்லை போலும். ஒருவேளை, அவர் சாதாரண மனிதன் போல" என்று நினைத்துக் கொண்டேன். எனவே அது சரியானது. ஆனால், வெறுமனே "நான், நான், நான்.' இந்த பரிசேயனும்கூட அதையே பெற்றிருந்தான். அது இன்னும் கட்டுப்பாடற்றதாக இருக்கிறது. 15. எனவே, அவன் மேலும் கீழும் நடப்பதை நாம் கவனிக்கிறோம். அவன், "எனக்கு இப்போது இந்த பட்டணத்தில் செல்வாக்கு உள்ளது. அவர்கள் எல்லாரும் என்னை பரிசுத்த மனிதனாக கருதுகிறார்கள், ஏனெனில், நான் பட்டணத்திலுள்ள மிகப்பெரிய சபையில் போதிக்கிறேன். எல்லாரும் என்னை உயர்வாக நினைக்கின்றார்கள் என்று நிச்சயமாகத் தெரியும். நான் தினமும் என் மதசம்பந்த வேலைகளைச் செய்கிறேன். இப்பொழுது, இது என்னுடைய மதசம்பந்தபட்ட காரியத்தை காண்பித்த வேளையாக இருக்கிறது. எனவே, நான் ஒரு இரவு விருந்தை ஆயத்தம் பண்ணலாம் என்று நினைக்கிறேன். எனவே, நான் டாக்டர் லேவி பரிசேயனை அழைத்து வரப்போகிறேன். மேலும், நான் டாக்டர் எஸ்றா பரிசேயனையும் அழைத்து வரப்போகிறேன். மேலும், நான் எல்லா இடங்களிலிருந்தும் அவர்களை அழைத்து வரப்போகிறேன். அந்த இரவுவிருந்தின் போது எனக்குக் குறிப்பு சீட்டு தேவைப்படுவது போல இருக்கிறது. நான் மாத்திரம் ஒரு குறிப்பு சீட்டு அல்லது துருப்பு சீட்டு, (அவர்கள் அதை அவ்விதம் அழைப்பார்கள்), நான் மாத்திரம் அதை பெறுவேனானால், அதுவே எனக்குத் தேவையானதாக இருக்கிறது. மற்ற போதகர்களுக்கு நான் எவ்வளவு பெரியவன் என்பதை காண்பிக்கும்படியாய், மகத்தான ஒரு கேளிக்கை நிகழ்ச்சிக்கான ஏதோவொன்றை நான் எங்கே பெற்றுக்கொள்வேன்? அதுபோன்ற ஏதோவொன்றை நான் செய்யும்போது, உங்களுக்குத் தெரியும், இப்பட்டணத்தில் இன்னும் அதிக செல்வாக்கு எனக்கு உண்டாகும். அதினிமித்தம், ஒருவேளை அநேகர் என்னுடைய சபையில் வந்து சேருவார்கள்" என்று சொல்லியிருப்பான். அதைப் போன்றதான ஆவி இன்றைக்கும் நம்முடைய அநேக சபைகளிலே காணப்படுவது (அது சரியே) மிகவும் மோசமான காரியம். 16. எனவே, சிறிது நேரத்திற்குப் பின்னர், அவன் தன்னுடைய அருமையான இடத்திலே, தனது தடிமனான கைக்ளை பிசைந்து கொண்டு, எகிப்திய சிறந்த கம்பளத்தின் மேல் நடந்து கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். அந்த பரிசேயர்கள் செல்வந்தர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு மிகுந்த பணம் இருந்தது. மிகச் சிறந்த வீடுகளில் வசித்தார்கள். அது, அவர்கள் தேவனோடு சரியாக இருந்தார்கள் என்ற அர்த்தத்தைக் கொடுக்காது, எப்பொழுதுமே இல்லை. அவர்கள் மிடுக்காக இருந்தார்கள், கல்வியறிவு கொண்டவர்களாய் இருந்தார்கள். அது அவர்கள் தேவனோடு சரியாக இருந்தார்கள் என்பதைக் குறிக்காது. நான், எல்லாவிதமான ஆராய்ச்சி மாநாடுகள், மற்றும் கல்லூரிகளிலிருந்து சிறந்த பட்டங்களைப் பெற்ற அநேக ஜனங்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு தேவனைப் பற்றி வேதத்தின் அ-ஆ-இ (a-b-c of the Bible) கூடத் தெரியாது. அது சரியே, அது இருதயத்துக்குள் வரும்போது... அவர்கள் படித்தவர்கள், ஆனால் அவர்களோ கிறிஸ்துவை அறியவில்லை. 17. அன்றொரு இரவிலே நான் சொன்னது போல, அவரை அறிவதே ஜீவன். புத்தகத்தை அறிவது அல்ல, சபையை அறிவது அல்ல, மதசம்பந்த கேள்வி பதில்களை (catechism) அறிவது அல்ல, ஆனால், கிறிஸ்துவை, கிறிஸ்து என்னும் நபரை அறிவதே ஜீவன். மேலும் அவர்... எல்லா பலிகளிலிருந்தும், எல்லா காணிக்கைகளில் இருந்தும், அவர்களுக்கு ஒரு பங்கு கிடைத்தது. அவர்களுக்கு ஜனங்களிடம் இருந்து தசமபாகம் கிடைத்தது. அவர்கள் செல்வந்தர் களாயிருந்தார்கள். அவர்களில் அநேகர் சிறந்த வீடுகளில் வாழ்ந்தார்கள். அவர்களால் ஒரு பெரிய இரவு விருந்தை (இன்று நாம் அழைப்பது போல்), அதைப் போன்றவற்றை கொடுக்க முடிந்தது, மேலும், நிறைய ஏழை மக்களும் அந்நாளில் இருந்தார்கள். 18. இப்பொழுது, இன்றிரவிற்குரிய என்னுடைய பாடப்பகுதிக்கான அநேக தகவல்களை, அந்நாட்களில் அவர்கள் ஜீவித்த விதம் மோன்றவற்றை ஜோசப்பஸ் (Josephus) மற்றும அநேக சரித்திர ஆசிரியர்களிடமிருந்து பெற்றுக் கொண்டேன். மேலும் நவீன நாட்களையும், பழமையான பழக்க வழக்கங்களையும் பார்க்கும்படியாக நான் அங்கிருந்தேன். அவர்கள் அநேகர் இன்றும் இருக்கிறார்கள். அவர்களது மிகச்சிறந்த வீடுகளையும் பொருட்களையும்... 19.அவன் வளாகத்தில் முன்னும் பின்னும், மேலும் கீழுமாக நடந்து, தொங்கிக் கொண்டிருக்கிற அவனுடைய அங்கியை இந்தவிதமாக இழுத்துக் கொண்டு, தலையில் மதத்திற்குரிய தலைப் பாகையுடனும், பிரத்தியேக உடையோடும் நடந்து போகிறதை என்னால் காண முடிகிறது. அவன் இவ்வாறு சொல்வதையும் நான் கேட்கிறேன்: "ஓ, ஓ, நான் ஏன் அதை மறந்து போனேன்? நல்லது, நான் அதைத்தான் செய்ய வேண்டும், நல்லது, நான் அதைப்பற்றி ஒரு வாரத்துக்கு முன்பே யோசித்திருக்க வேண்டும். அதைத்தான் நான் செய்யப் போகிறேன், உங்களுக்கு தெரியுமா, பரிசேயன் ஜோன்ஸ் அந்தக் கலிலேயனை எப்படியும் வெறுக்கிறான். ஏனென்றால், ஒரு நாள் அவர் அவனைக் கடிந்து கொண்டு, அவனை புதருக்குள் இருக்கும் ஒரு பாம்பு என்று கூறிவிட்டார். நான் உங்களிடம் கூறுகிறேன், அவன் அவரை வெறுக்கிறான். ஹூம்... நான் அவரை இங்கு அழைக்கப்போகிறேன். நான் பரிசேயன் லேவியையும் கூட அழைத்து வரப்போகிறேன். அவனையும் அழைத்துக் கொண்டு வருவேன். அவனும் கூட அவரை வெறுக்கிறான். என்னே! எவ்வளவாய் அவன் அவரை வெறுக்கிறான். நான் ஏன் அதைப் பற்றி நினைக்காமல் விட்டுவிட்டேன். அதை செய்தாக வேண்டும்." இதினிமித்தமே அந்த தூதுவன் அங்கே அவரிடம் சென்றான். 20. மேலும் அவன், "என்ன செய்யப் போகிறோம் என்று நான் கூறுகிறேன். இப்பொழுது, அவர் தம்மை ஒரு தீர்க்கதரிசியாக கூறிக் கொள்கிறார். மேலும் அவர், காரியங்களைப் பார்ப்பதாகவும், காரியங்களை முன்னறிவிப்பதாகவும் கூறிக் கொள்கிறார். ஆனால், அவர் ஒரு போலியானவர் (fake) என்பது நமக்குத் தெரியும். அவரிடம் ஒன்றுமில்லை என்பதும் நமக்கு தெரியும். சபை மக்களாகிய நாம், படித்தவர்களாகிய நாம், சாமர்த்தியம் உள்ளவர்களும், இந்தப் பட்டங்களையெல்லாம் அறிந்தவர்களாகிய நாம், அந்த நபருக்கு ஒன்றுமே தெரியாது என்பதை அறிந்திருக்கிறோம். இந்த உலகத்தில் அவர் ஒரு பெயல்செபூலே அன்றி வேறொன்றுமில்லை. ரபீ ஜோன்ஸ் என்னவாயிருந்தார் என்பதை அவரிடமே அந்த கலிலேயன் கூறினபோது நீங்கள் அதைக் கேட்டிருக்க வேண்டுமே. பொங்கி ஜோன்ஸ் எழுந்துவிட்டார். ஆனால், இப்பொழுது வரவழைத்து, சரியாக இங்கே அவரை அமர அவரை இங்கு வைத்து, அவர் போலியானவர் என்பதை நிரூபித்து, நான் அவரை பிடித்து விட்டேன் என்பதை அறிந்து கொள்ளும்படி நல்ல ஒரு கேளிக்கை நேரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆகவே, அவரை இங்கு வரவழைப்போம். எனவே, நான் எனக்கு உகந்த ஓட்டக்காரனை, கூலிக்காரனை அங்கே அனுப்புகிறேன், அவன் அவரை அழைப்பான். ஓ, இதை நான் நெடு நாட்களுக்கு முன்பே யோசித்திருக்க வேண்டும், நல்லது, இப்பொழுது நான் துரிதமாக என் அழைப்பிதழ்களை கொண்டு செல்வது சிறந்தது" என்றான். ஏனெனில், நீங்கள் ஒரு பாலஸ்தீனிய விருந்தில், அழைப்பில்லாமல் பங்கேற்க முடியாது. 21. அப்பொழுது அவன், "என்ன செய்யப் போகிறோம் என்று நான் கூறுகிறேன். சரியாக இந்த இடத்தில் ஒழுங்கு செய்வதற்குப் பதிலாக, நான் என்ன செய்கிறேன் என்பதை மக்கள் காணும்படியாக, மிகச்சிறந்த சமையல்காரரை வரவழைக்கிறேன். ஆட்டை எடுத்து, நான் நான் திறந்த வெளியில் சமைத்து, வாசனை மாசலா கொண்டு பொரித்து, எல்லாருக்கும் தங்கள் நாவில் எச்சில் ஊறும்படிச் செய்து, அனைவருக்கும் ஒரு பெரிய இரவு விருந்தை நான் ஆயத்தம் செய்வேன். மேலும் எனக்கு... எல்லாருக்கும் தரித்திரர்களுக்கு அல்ல, நான் தேர்வு செய்பவர்களுக்கு மட்டும்; அல்ல. அதன் பிறகு, விருந்து முடிந்தவுடன் நாம் நாசரேத்து இயேசுவை வைத்து வேடிக்கை செய்யலாம். அவர் ஒரு தீர்க்கதரிசி இல்லை என்பதை நிரூபிப்போம். ஜோன்ஸ் முதலானோர் நகைத்து சிரிப்பார்கள். ஓ! அது அற்புதமாக இருக்கும்" என்று சொல்வதை என்னால் கேட்க முடிகிறது. "உங்களுக்கு என்னவென்று தெரியுமா? இங்குள்ள வீட்டின் உட்புறத்திலோ அல்லது வீட்டின் தாழ்வாரத்திலோ நான் அதைச் செய்யப் போவதில்லை என்று நம்புகிறேன். அங்கே சிறந்த விஸ்தாரமான ஒரு முற்றம் உள்ளது. அங்கே மிகவும் சுவையான திராட்சைகள், வெண்மையான திராட்சைகள், ஓ, அவைகள் இப்போதுதான் பழுத்துக் கொண்டு வருகின்றன, வெளியே அங்கே விருந்து மேஜையை அமைப்பது மிகவும் அருமையாயிருக்கும் அல்லவா?" 22. மேலும், அந்த விரும்பத்தகாத நபரை, ('the dog' man who is unpleasant or not to be trusted - மொழி), அவ்வாறு நாம் அழைக்கிறோம், அவர்கள் அதை ஒருபுறம் வைப்பார்கள். நிச்சயமாக அவர்கள் செய்வார்கள். அவர்கள் உண்மையாகவே பெரிய அளவில் ஏற்பாடு செய்வார்கள். அவர்கள் செய்யும் விதத்தை நீங்கள் பார்க்க வேண்டுமே. என்னே! நாம் அந்த விதமாக இயேசுவை மகிழ்விக்க முயற்சிக்கிறோம். பெரியளவில் வடிசாறு (soup supper - சூப்) இரவுவிருந்து ஏற்படுத்தி, போதகருக்குக் கொடுக்கும்படி, ஒரு தட்டு 50 செண்ட்கள் (cents) என விற்கிறோம். அது சரியே. நாமும் அதிகளவு வித்தியாசப் பட்டவர்களல்ல. அது சரியே. 'பட்டணத்திலுள்ள மிகவும் மோசமான பாவி" என்பதின் பேரில் இன்றிரவு பேசப் போவதாக நான் உங்களிடம் கூறினேன். இப்பொழுது, அவனுக்கு எல்லாமே இருந்தது. அவன் "நான் அவ்விடத்தில் அதை ஒழுங்கு செய்வேன். எப்பேர்ப்பட்ட ஒரு தருணத்தை நான் பெறப் போகிறேன். நாம் சரியாக வெளியே அவ்விடத்தில், இந்த பெரிய திராட்சைகள் தொங்கிக் கொண்டிருக்கும் அவ்விடத்தில் நாம் இருப்போம். அது மிகவும் அழகானதாக இருக்கும். அதன் வாசனை ரம்மியமாக இருக்கும். மேலும், நான் ஆட்டுக்குட்டிகளை சமைத்து..." என்று கூறினான். 23. உண்மையாகவே அவர்கள்... அவர்களுக்கு இந்திய வேலைக்காரர்கள் இருந்தார்கள். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் மிகவும் பயிற்சியளிக்கப்பட்டவர்களாய் இருந்தார்கள். தங்கள் காலணிகளில் சிறு மணிகளை அவர்கள் அணிந்திருந்தார்கள். அவர்கள் நடக்கும்போது ஏற்படும் சத்தம் ஒரு இசையாக அமையும் விதத்தில் அவர்களது நடை காணப்படும். அவர்கள் தட்டுமுட்டு சாமான்களை மிகவும் கண்ணியத்தோடு கையாளுவார்கள், நீங்கள் நினைப்பதற்கும் மேலாக எல்லா விதத்திலும் மிகவும் உயர்வாய் நடந்து கொள்வார்கள். "ஓ, அதை நான் கச்சிதமாக இருக்கும்படி செய்வேன்." அந்நாளில், தேசம் முழுவதிலும் உள்ள தரித்திரர்கள்... நல்லது, அவன் எல்லாவற்றையும் கச்சிதமாக அமையப் பெற்றான். எனவே, அவன் எல்லா விஷயத்தையும் சிறப்பாக்கி, எல்லாக் காரியங்களையும் ஒன்று கூட்டினான். இறுதி நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆகவே, அவன் உள்ளே சென்று தன் அறையை அலங்கரிக்கிறான். அவன் எல்லாவற்றையும் அழகுபடுத்தி... எவ்வளவாய் அவர்கள் உட்புற அலங்கரிப்பை(interior decoration) நேர்த்தியாக செய்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்படி அவைகளைப் பொருத்துகிறார்கள். 24. அமெரிக்காவில் இன்றும் அப்படிப்பட்ட காரியங்கள் நிறைய உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். நகரத்திற்கு ஜனாதிபதி வரும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் எல்லா கொடிகளையும் ஏற்றி, வண்ணமயமாக இருக்கும்படிச் செய்து, அவைகளை பறக்க விடுகிறார்கள். பூச்செண்டுகளைக் கொடுக்கக்கூடிய சிறுபெண்கள் ரயில் நிலையத்தில் அவரை வரவேற்று, வழிநெடுக அவர்கள் மலர்களைத் தூவுகிறார்கள். மேலும், தங்களது சிறந்த ஆடைகளை உடுத்தி, நின்று கொண்டு, அவரை நோக்கி கைகளை அசைக்கிறார்கள். அது எல்லாம் சரிதான், அது சரி. ஆனால், விஷயம் என்னவென்றால், இயேசு நகரத்திற்கு வரும்போது, அதைப் பற்றி எதுவும் சொல்லப்படுவதில்லை. யாருக்குமே அதைப்பற்றி தெரிவதில்லை. நீங்கள் அவ்விதம் அவரை வரவேற்பது கிடையாது. இருப்பினும் நாம் எல்லா நேரத்திலும், "தேவனே, எங்களுக்கு ஒரு பெரிய - ஒரு பெரிய எழுப்புதலைக் கொடும்" என்று ஜெபிக்கிறோம். ஆனால், அவர் வரும்போதோ, நீங்கள் ஒருபோதும் அவரை வரவேற்பதில்லை. நீங்கள் எப்பொழுதும் அவருக்கு மூன்றாம் அல்லது நான்காம் இடத்தையே தருகிறீர்கள். 25. அநேக நேரங்களில், நாம் செய்வதற்கென்று அநேக காரியங்களைப் பெற்றிருக்கிறோம், அநேக விஷயங்களால் நமது சிந்தையை ஆக்கிரமித்துக் கொள்கிறோம். அவர் வரும்போது நம்மால் அவரைத் தொழுதுகொள்ள முடிவதில்லை. எங்கே நகரத்தில் ஒரு எழுப்பதல் உள்ளதோ, அங்கே அவர் கூட்டத்திற்கு வருவார். அந்நகரம் முழுவதும் உள்ள ஊழிய சங்கங்கள் ஒன்றுகூடி, காலை உணவு எடுத்துக் கொண்டுதிட்டங்களை உருவாக்குவார்கள்; மேலும், பெரிய கூட்டத்தையும் நடத்துவார்கள். அதன்பிறகு, இயேசு சபைக்கு வரும்போது, யாருடனாவது தொடர்பு கொள்ள ஆரம்பிக்கும் போது, அவர்கள், "அந்த பைத்தியக்காரனை வெளியேற்றுங்கள்" என்பார்கள். இயேசு உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார். அவருக்கு - அவர் முதல் ஸ்தானத்தை கோருகிறார். ஆனால் நாமோ அவருக்கு கடைசி இடத்தையே கொடுக்கிறோம். நமக்கு மற்ற காரியங்களையெல்லாம் செய்ய நேரம் கிடைக்கிறது, ஆனால் கு முன்பு மிக சொற்ப இரவில் படுக்கையில் குதிப்பதற்கு நிமிடங்களே நீங்கள் அவரைப் பார்க்கிறீர்கள், ஒருவேளை, வாரத்துக்கு ஒருமுறை இருக்கலாம். பாருங்கள்? "அருமை தேவனே, என்னை ஆசீர்வதியும், என் சகோதரனை, அப்பாவை, அம்மாவை, திரு. ஜோன்ஸ் அவர்களை... ஆமென்." பின்னர் பினனர் படுத்து விடுகிறோம். கடைசி இடம், ஆனாலும் அவர் ஒருபோதும் உன்னைத் தள்ளி விடமாட்டார். எப்படியும் அவர் உனக்கு நல்லவராகவே இருக்கிறார். அது தான் எனக்கு அவரை உண்மையானவராக ஆக்குகிறது. 26. கடந்த ஈஸ்டர் தினத்தன்று உங்களது அழகான ஆடையை உடுத்தியிருந்தீர்கள், அந்த அழகான தொப்பியையும் கூட. ஓ, முந்தின ஈஸ்டருக்கு நீங்கள் சபைக்குச் சென்றிருந்தீர்கள், போதகர் உம்மை மீண்டும் அடுத்த ஈஸ்டரன்று தான் பார்க்கிறார். இப்படியாக அது போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், நீங்கள் அவருக்கு வெறுமனே சில நிமிடங்களே கொடுக்கிறீர்கள். போதகர் இருபது நிமிடங்களுக்கு மேல் பேசினால், "ஓ, என்னே! பேசும்படி இத்தனை காரியங்களையும் அவர் எப்படித்தான் நினைக்கிறாரோ [சபையார்? சிரிக்கின்றனர்- மொழி பெயர்ப்பாளர்.) அவைகள் சரியானது தானா?" என்கின்றனர். வெளியே வந்து, உங்களுக்கு அந்த அழகான ஆடையை எல்லாருக்கும் காண்பிக்க வேண்டும். ஆனால், அவரோ அதற்காக உங்களை குற்றப்படுத்துகிறதில்லை. அவர் அதை ஏற்றுக்கொள்கிறார். அது தான் எனக்கு அவரை உண்மையானவராக ஆக்குகிறது. சிறிதாயிருப்பது பொருட்டல்ல... "கர்த்தாவே, நீர் இரண்டாம் இடத்தை எடுத்துக் கொள்வீரா?" ஆம். நான் இரண்டாம் இடத்தை எடுத்துக் கொள்வேன்." பரலோகத்தின் தேவன் ஒரு சிருஷ்டியிடம்... "நீர் இரண்டாம் இடத்தை எடுத்துக் கொள்வீரா?" "ஆம். நான் இரண்டாம் இடத்தை எடுத்துக் கொள்வேன்." "நீர் மூன்றாம் இடத்தை எடுத்துக் கொள்வீரா?" "ஆம். நான் மூன்றாம் இடத்தை எடுத்துக் கொள்வேன்." "நீர் நான்காம் இடத்தை எடுத்துக் கொள்வீரா?' ''ஆம். நீ கொடுக்கும் எந்த இடத்தையும் நான் பெற்றுக் கொள்வேன்.' ஆனாலும் அவர் ஒருபோதும் உன்னைத் தள்ளி விடமாட்டார். எந்த நேரத்திலும் அவர் வருவார். உப்பரிகையின் மேல் இருக்கும் இடமாக இருந்தாலும் சரி, எந்த இடத்தையும் நீங்கள் அவருக்குக் கொடுக்கலாம். உங்களுடைய வரவேற்பறையில் அவர் உங்களுக்கு வேண்டுவதில்லை. உங்கள் நண்பர்கள் உள்ளே வரும்போது, நீங்கள் எல்லோரும் உள்ளே போய் இயேசுவைக் குறித்து பேசி, தரையில் முழங்காலிடலாம். அதுவே உங்களுடைய முக்கியமான உரையாடலாக இருக்கட்டும்; அவரைப் பற்றி பேசுங்கள்; ஜெபியுங்கள்; அவர் செய்தவற்றிற்காக நன்றி கூறுங்கள்; ஒருவருரோடொருவர் சாட்சி பகருங்கள். ஓ, இல்லை, அது (வரவேற்பறை) நகைச்சுவை குவியலின் பகுதியாக இருக்கிறது; அவபக்திக்குரிய செயல்; - (carrying on activity that is not honest or moral - மொழி.); பின்னர் நீங்கள் இயேசுவிடம் பேசும்போது, நீங்கள் உப்பரிகைக்கு (attic) செல்ல வேண்டியதாயிருக்கிறது. கீழ்த்தளத்தில் அல்லது எங்கேயாவது குறிப்பட்ட இடைவெளியில் அவரோடு பேசிக் கொண்டே இருங்கள். நீங்கள் அங்கு செல்ல ஆரம்பிக்கையில்... நீங்கள் உங்களுடைய... 27. நீங்கள் அவரை தொழுது கொள்ளும்படியாக, சிறிதளவாவது அவரை நேசிக்கும்படியாக தேவன் உங்கள் இருதயத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கையில், நீங்களோ "நல்லது, நான் அதை பாத்திரம் கழுவும் போது செய்து கொள்கிறேன்" என்கிறீர்கள். செல்வி ஜோன்ஸ் உங்களை அழைத்து, "லிடி, கடைக்குச் இன்று நாங்கள் செல்கிறோம். நகரத்திற்குச் பொருட்களை வாங்க வருகிறாயா?" என்று கேட்பாள். "ஓ, ஆமாம். நானும் உன்னுடன் வருகிறேன்." பின்னர் அன்றிரவில், படுக்கையில் குதித்து, "தேவனே, எனக்கு நல்லவராக இரும். என் தாயையும், தகப்பனையும் மற்றெல்லாரையும் ஆசீர்வதியும்" என்று கூறி விட்டு படுக்கைக்குள் புகுந்து விடுகிறீர்கள். அந்த விதமாகத்தான் நாம் இயேசுவுடன் நடந்து கொள்கிறோம். அவருக்கு கடைசி இடத்தையே கொடுக்கிறோம். 28. ஏன்? பட்டணத்திற்குள் இயேசு வரும்போது, கொடிகள் ஏற்றப்பட வேண்டும்; தெருக்களில் ஜனங்கள் அவரைப் பற்றி பேசிக் கொண்டும், அவரை மகிமைப்படுத்திக் கொண்டும் இருக்க வேண்டும். வியாதியஸ்தரும், துன்புறுவோரும் அவருடைய சுகமாக்கும் ஆசீர்வாதங்களை ஏற்றுக்கொண்டு தெருக்களில் எல்லாருக்கும் சாட்சி பகர வேண்டும். கடைசி இடத்தையே ஆனால், நாம் அவருக்குக் தருகிறோம், இருப்பினும் அவர் தொடர்ந்து வருகிறார். அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார், ஒருவரும் கெட்டுப் போக வேண்டும் என்று விரும்பாமல், எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார். இப்பொழுது, அந்த நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. பின்னர், அவனுடைய வேலையாட்களை அவன் அனுப்பினான். அவனுக்கு ஏராளமான வேலையாட்கள், இளைஞர்கள் அவ்விடத்திலே இருந்தார்கள். அவன் அவர்களுடைய வேலைகளைச் செய்ய அவர்களை வெளியே அனுப்பினான். முதலாவதாக ஒரு இரதம் வருகிறது. பாலஸ்தீனாவில் அந்நாட்களில் பெரும்பாலான பயணங்கள் கால்நடையாக நடந்து போவதாகவே இருந்தது. விலங்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர, மற்றபடி அவர்கள் கால்களால் பயணங்கள் மேற்கொள்வதை மட்டுமே கொண்டிருந்தனர். சுமை சுமக்கக் கூடிய மிருகங்களே அதிகமாக காணப்பட்டன. 29. அந்த பெரிய ரதம் தனது பயணத்தில் இருந்தது, அதிலிருந்து டாக்டர் சங்கை இன்னார்- இன்னார் வெளியே வந்தார். அவரை அவன் உள்ளே வரவழைத்துக் கட்டித்தழுவி வீட்டுக்குள் அழைத்துச் சென்றான். பணியாளன் குதிரைகளைக் கூட்டிக்கொண்டு வந்து, அவைகளை சுத்தம் செய்து, அவைகளை குதிரை லாயத்தில் விட்டான். அவர் விருந்தில் இருக்கும்போது, ரதத்தை பளபளப்பாக்கி, எல்லாவற்றையும் தயாராக வைத்தான். எல்லாவற்றையும் கவரத்தக்க வகையில் செய்தான், 'உணவு திருவிழா' (அது சரி) [blow-out] என்று நாம் அழைப்பது போல, மதத்தின் பெயரால் கூட அதைச் செய்கிறோம். 30. மேலும், அநேக ஜனங்கள் நடந்து சென்றார்கள். அவர்கள் வீதிகளில் நடக்கும் போது மிருகங்களும் கூட அவ்வழியே நடந்தன. இன்று நமக்கு இருப்பது போல அன்று தார் சாலைகளோ, கான்கிரீட் சாலைகளோ கிடையாது. குன்றுகளின் மீதும் பாலைவனத்திலும் செல்லக்கூடிய அழுக்கான சாலைகளாகவே இருந்தன. மேலும், அந்த வழியிலே அவர்கள் செல்கையில், மிருகங்களும் கூட அதிலே நடந்தன, அந்த மிருகங்களின் நாற்றமும், அவைகளின் கழிவுகளும் அங்குள்ள தூசிகளில் படிந்திருந்தன. அவைகள் மிகவும் மோசமான துர்நாற்றத்தை அந்த சாலையில் ஏற்படுத்தியது. அக்காலத்தில் பாலஸ்தீனியர்கள் அங்கி போன்ற ஒரு வகையான உடையை உடுத்தியிருந்தனர். ஆடையின் கீழ் பகுதி முழங்காலை மூடும் அளவிற்கும், மேலும் காலணிகளையும் அவர்கள் அணிந்திருந்தனர். அவர்கள் நடக்கும்போது அந்த அங்கியானது தூசியை உரசிக் கொண்டு கால்களிலும், முகத்திலும், கைகளிலும் வியர்வையை ஏற்படுத்தி ஒருவகையான மோசமான துர்நாற்றத்தை ஏற்படுத்தியது. அப்பாதையில் பயணம் செய்தோர் வந்து சேரும்போது, விலங்குகளிடமிருந்து வந்த துர்நாற்றமானது அவர்கள் மீது தங்கியிருக்கும். அவர்கள் கதவண்டை வரும்போது, அவர்கள் இருக்கின்ற நிலைமையில் எந்த நிகழ்ச்சியையும் நடத்த முடியாது, ஏனெனில், சாலைகளிலிருந்த துர்நாற்றமானது அவர்கள் மீதும் இருந்தது. பாலஸ்தீனத்தின் உஷ்ணமான சூரிய கதிர் அவர்கள் முகத்தில் பட்டு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. 31. எனவே, அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், விருந்தினர் வரும்போது, கதவின் அருகில் எப்பொழுதுமே ஒரு பணியாளன் இருப்பான். முதன் முதலில் நீங்கள் சந்திக்கும் நபர் கால்களை கழுவும் பணிவிடைகாரனாக இருப்பான். மற்ற எந்த பணியாளர்களையும் விட கால்களைக் கழுவும் இந்த பணிவிடைக்காரன் செய்யும் வேலையே மிகவும் மோசமானது. இதை நினைக்கும்போது, ஆசீர்வதிக்கப்பட்ட நமது கர்த்தராகிய இயேசு, ஒரு கால்கழுவும் பணிவிடைகாரனாக ஆனார். பரலோகத்தின் உன்னத ஸ்தலங்களிலிருந்து, கீழ்த்தரமான பணிவிடைகாரனின் வேலையை எடுத்துக் ஒரு கொள்ள இப்பூமிக்கு இறங்கி வந்தார். ஆனால் நாமோ, நல்ல உடைகளை நாம் அணிவதால், நல்ல காரில் நாம் பயணம் செய்வதால், நம்மை ஏதோ பெரிதாக நினைத்துக் கொள்கிறோம். அது உங்களுக்கு வெட்கக்கேடு! தேவனிடத்திலிருந்து நாம் மிகவும் தூரத்தில் இருக்கிறோம் என்பது பரிதாபத்திற்குரியது. ஓ... நாம் மிகவும் மிகவும் மதச் சார்புடையவர்களாய் இருக்கிறோம். ஆனால், தேவனிடம் நெருங்க வேண்டும் என்பதை குறிப்பிடுகிறேன். 32. எனவே, சில... நான் இதைச் சொல்ல விரும்பவில்லை. இன்றைக்கு நமது தேசத்திலுள்ள கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் சிலர், தேவனைப் பற்றி மிகவும் குறைவாகவே அறிந்துள்ளனர். ஓ, தேவனை அறிவதைத் தவிர்த்து, தங்கள் மதத்தின் முழுமையையும் அறிந்திருக்கின்றனர். தன்னைத் தானே தாழ்த்தினார், அதுதான் எனக்கு அவரை உயர்ந்தவராகச் செய்கிறது. ஏதோ ஒரு பெரிய மனிதனாகும் படிக்கு அல்லாமல், ஒரு பெரிய பெயரையோ அல்லது அதுபோன்ற எதையோ பெறுவதற்காக அல்லாமல், அவர் இங்கே கீழே வருவதற்கு சித்தம் கொண்டதை நினைக்கும்போது, அதுதான் அவரை எனக்கு உண்மையானவராக ஆகச் செய்கிறது. அவர் தன்னையே தாழ்த்தி, அவர்கள் எல்லோருக்கும் ஒரு வேலைக்காரனாக ஆனார். அதுதான் என்னுடைய கர்த்தராகிய இயேசு. அந்த ஒருவரைத் தான் நான் நேசிக்கிறேன்; அந்த ஒருவருக்காக தான் என் வாழ்நாள் முழுதும் சேவை செய்ய விரும்புகிறேன்; அவருக்காக வேலை செய்து, ஜனங்கள் அவரை நோக்கிப் பார்க்கவும், அவரை விசுவாசிக்கவும், நேசிக்கவும் செய்யும்படிக்கு எல்லாவற்றையும் செய்ய விரும்புகிறேன். அவர் அன்பானவர், அவர் விலையேறப் பெற்றவர். 33. கால்களைக் கழுவும் ஒருவராக மாறி, சீலையை எடுத்து அரையிலே கட்டிக்கொண்டு சீஷர்களின் கால்களைக் கழுவி, "உங்களில் பெரியவனாய் பணிவிடைக்காரனாய் இருக்கக்கடவன்" என்றார். அது தான் இருப்பவன், எல்லாருக்கும் அவருடைய எடுத்துக்காட்டாய் இருந்த ஆனால் இன்றோ, ஓ, நாம் அதற்கு மாறாக இருக்கிறோம் (ostile): "ஆம் ஐயா, அந்த நபருடன் நான் பணிந்துபோக மாட்டேன். அந்த வயதான குடிகாரனை உங்களுக்கு தெரியுமே அவனோடு எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை, ஓ, நான் டாக்டர் ஜோன்ஸ்" என்பதாகக் கூறிக்கொள்கிறோம். பாருங்கள்? அதனால்தான் நாம் எங்கேயும் எதையும் பெற்றுக் கொள்வதில்லை. அதனால்தான் நமது பிரசங்க பீடங்கள் பலவீனமாய் இருக்கிறது. அதனால்தான் நமது சபைகளில் இன்றைக்கு அடையாளங்களும் அற்புதங்களும் நமக்கு காணப்படுவதில்லை. அதனால்தான் பண்டைய பாணியிலான ஒரு எழுப்புதல் நமக்கு இல்லை. நமக்கு ஒன்றுமே இல்லாத நிலையில், நம்மை ஒரு பொருட்டென்று எண்ணிக் கொள்கிறோம். "ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத் தானே வஞ்சிக்கிறவனாவான்" என்று வேதாகமம் கூறுகிறது. தான் அறிய வேண்டியதை அறியாமலிருக்கிறான். தான் ஒரு பாவி என்பதை அறிந்து கொள்ளத்தான் வேண்டும். 34. அதன் பிறகு, அந்த முதல் பணிவிடைக்காரன் வருகிற நபரை சந்தித்து, ஒரு நாற்காலியில் உட்கார வைக்கிறான். அது தலைவாயிலில் சிறிதாக உள்ள ஒரு நடைமண்டபம் ஆகும் (vestibule). தென் தேசத்தில் அவ்வாறு அழைப்போம். நாற்காலியில் இந்தவிதமாக உட்கார வைக்கிறான். அவனது காலை உயர்த்தி வைத்து, அவனது காலணியை கழற்றுகிறான்; சுத்தமான தண்ணீரை எடுத்து, பிறகு அவனது காலைக் கழுவுகிறான். ஏனெனில் அவை, வியர்த்தும், சாலையில் உள்ள அழுக்குகள், தூசுகள் மற்றும் சாணம் போன்றவற்றால் நாற்றம் எடுத்தும் இருக்கிறது. அவன் அவனது கால்களைக் கழுவுகிறான். பிறகு நல்ல துவாலையால் நன்றாக துடைக்கிறான். பிறகு அவன் இன்னொரு காலையும் எடுத்து அவ்விதமே செய்கிறான். இதுபோன்ற விருந்துக்கு அவன் அழைக்கப்பட்டிருக்கும்போது, அந்த சிறந்த கம்பளத்தில் நடக்கும் படியாக, உபசரிப்பவன் அவனுக்கு எப்பொழுதுமே காலணிகளைக் கொடுப்பதுண்டு. மென்மையான, பளபளப்பான, பட்டு போன்ற காலணிகளை அவன் வைத்திருப்பான். வருகிற விருந்தினன், தன் கால்களுக்குப் பொருந்தும் நல்ல காலணியை அணிந்து கொள்வான். 35. இப்போது அவன் மிகவும் நன்றாக இருப்பதாக உணர்கிறான். அவனது பாதங்களும், கால்களும் கழுவப்பட்டு. துர்நாற்றமும் போய்விட்ட நிலையில் இருக்கிறான். பிறகு, அவன் அடுத்த கதவண்டை செல்கிறான். அவன் அவ்வாறு போகும்போது, இன்னொரு பணிவிடைக்காரன், அடுத்த கதவருகில் அவனை சந்திக்கிறான். அந்தப் பணிவிடைக்காரன், எண்ணெய் ஊற்றக்கூடிய ஜாடியை தன் கையில் வைத்துள்ளான். 36. இப்பொழுது, எண்ணெயானது, இந்த ஒலிவ மரத்திலிருந்து கிடைக்கக்கூடியதாகும். அது மிகவும் அருமையான நளத் தைலத்தின் (Spikenard) வாசனையைக் கொண்டுள்ளது. இது ஒரு பிரபலமான ஆப்பிள் வகை, ரோஜா ஆப்பிள் வகையைச் சார்ந்தது. பனிக்காலங்களில், பூக்கள் (roses) மலராமல் இருக்கும்போது, அது சிறு பழமாய் மாறுகிறது. நல்லது, எகிப்து தேசத்துக்குப் போகும் வழியில், அல்லது அங்கே கீழே இருக்கும் சில தேசங்களில், அவர்களுக்கு இந்த சிறு பழங்கள் கிடைக்கும். நான் ஒருமுறை அதைப் பார்த்துள்ளேன். இது ஒரு சிறு ஆப்பிள் பழத்தைப் போல இருக்கும். நீங்கள் உங்கள் கைகளில் ஓரிரு முறை அதைத் தேய்த்தால், அது உங்கள் கைகளுக்குள் ஊறி, சில வாரங்களுக்குப் பின்னரும் கூட அந்த நறுமணம் இருந்து கொண்டே இருக்கும். மேலும், இது மிகவும் விலை உயர்ந்த ஒன்று. இந்த நளத தைலத்தை செய்வதற்கு, இவைகளை அவர்கள் அரைத்து, அந்த எண்ணெயில் போடுவர். ஏனெனில், எண்ணெயானது சில தினங்கள், சில வாரங்கள், அல்லது சில மாதங்கள் ஆன பிறகு ஒரு பழைய வாசனையை கொடுக்கும். ஆனால், இது எப்போதும் அதை பசுமையாக வைத்திருக்கும். மிகவும் விலை உயர்ந்தது... சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுக்குக் கொடுத்த சில பொக்கிஷங்களாக இது காணப்பட்டது. அவர்கள் மிகவும் உயரமான இடத்துக்கு ஏறிப் போய் மலைகளின் உயரத்தில் இருந்து இந்த பழங்களை எடுத்து வந்து அந்த தைலத்தைத் தயாரிக்கின்றனர். 37. அதன் பிறகு, விருந்தளிப்பவரின் மரியாதைக்கிணங்க, விருந்தினன் தனது இந்த தைலக்குப்பியைக் கொண்டு, கரத்தை நீட்டுவார்; அந்த கரங்கள் வியர்த்தும், அழுக்கடைந்தும் காணப்படும். எனவே, அவன் அருமையான சில தைலங்களைக் கொண்டு, அந்த கரங்கள் முழுதும் தேய்ப்பான். பின்னர் ஒரு துவாலையைக் கொடுப்பான். அவன் நன்றாக அந்த கரங்களைத் துடைத்து விடுவான். பிறகு இன்னும் கொஞ்சம் அதிகமானதை கொடுக்கிறான். அதை அவன் முகம் முழுவதிலும், மற்றும் கழுத்துக்குப் பின்பும் தேய்க்கிறான். அது மென்மையாக்குகிறது. அதை உபயோகப்படுத்தினால், அல்லது பாலஸ்தீனாவுக்கு உங்களில் எவராவது விஜயம் செய்திருந்தால், நான் என்ன சொல்லுகிறேன் என்பது புரியும்; அது மென்மையான உணர்வைத் தரும். 38, மேலும் பாலஸ்தீனத்தில், சூரியனின் நேர்க்கதிர்கள் உடலில் மோசமான எரிச்சலை உண்டுபண்ணுகிறது. ஆண், பெண் இரு பாலரும் அதை (தைலத்தை) உபயோகிப்பர். அவர்கள் அதை தங்கள் முகத்தில் பூசி விட்டு, பின்பு வேறொரு சுத்த துவாலையால் அதை துடைத்து விடுவர். இப்போது அவர்களுடைய பாதங்கள் சுத்தமாகியுள்ளது, இப்போது அவர்கள் சிறந்த சுத்தமான, மொக்கசின்கள் (Moccasins) என்று நாம் அழைக்கக் கூடிய, ஒரு ஜோடி தோல் காலணியை அணிந்துள்ளனர். அவர்கள் கரங்கள் சுத்தமாக உள்ளன. அவர்கள் பாதங்கள் சுத்தமாக உள்ளன. முகத்தில் வியர்வை மற்றும் துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக உள்ளது. அவர்கள் இப்போது புத்துணர்வு பெற்று, விருந்தளிப்பவரை சந்திக்கச் செல்ல ஆயத்தமாக உள்ளனர். பிறகு அவர்கள் உரையாடும் அறைக்கு(parlor) நடக்கின்றனர். அவர்கள் அப்படி உள்ளே செல்லும்போது, விருந்து உபசரிப்பவன் அங்கே நின்று அவர்களை வரவேற்கிறான். முதலாவது, அவன் ஏதாவது செய்யும் முன்பு, அவன் தனது வலது கரத்தை நீட்டி, விருந்தாளியின் வலது அவர்கள் தங்கள் இடது கரத்தை கரத்தைப் பிடித்து, போட்டுக் கொள்கின்றனர். ஒருவருக்கொருவர் தோள்களில் உபசரிப்பவன் விருந்தாளியை கூட்டிக்கொண்டு வருகிறான். அவனை கன்னத்தின் ஒரு புறத்தில் முத்தமிடுகிறான். மீண்டும் மறுபுறத்திலும் முத்தமிடுகிறான், பிறகு அவன் ஒரு முழுமையான சகோதரனாகிறான். ஓ! அவன் இப்பொழுது வீட்டில் இருக்கிறான். அவன் கழுவப்பட்டுள்ளான். அவன் புத்துணர்வு பெற்றுள்ளான். இப்பொழுது அவன் முத்தமிடப்பட்டு, வரவேற்கப்பட்டுள்ளான். 39. இப்பொழுது, இந்த முத்தமானது வரவேற்பின் முத்தமாகும். உபசரிப்பவன் விருந்தாளியை முத்தமிட்ட பின்பு, விருந்தாளியானவன் பனிக்கட்டி பெட்டியினிடமோ (icebox), அல்லது எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அவன் வீட்டில் இருப்பதைப் போல உணருகிறான். (he is just at home). ஆனால், அவன் அவ்விதம் செய்யப்படும் வரை, அவன் முத்தமிடப்படுவதற்கு தகுதியற்றவன், அவன் முத்தமிடப்பட முடியாது. ஏனெனில், அவன் தகுதியுடையவன் அல்ல. அவனிடத்தில் துர்நாற்றம் இருக்கிறது, அவன் மீது பிசுபிசுப்பான வியர்வை இருக்கிறது. அதன் பிறகு... அவன் சுத்தமாக்கப்பட்டு, புத்துணர்வு பெற்ற பிறகு, விருந்து உபசரிப்பவனை சந்திக்கலாம். அவனது கைகளை குலுக்கலாம், அவனது கன்னத்தில் ஒருபுறமும், மறுபுறமும் முத்தமிடலாம், அதன் பிறகு அவன் ஒரு உண்மையான சகோதரனாக மாறுகிறான். அவன் சுற்றிலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், தான் விரும்பின எதையும் செய்யலாம். இந்த விதமாகத்தான் அது செய்யப்பட்டது. மேலும், இந்த செல்வந்த பரிசேயன் தனது விருந்தினரை எவ்வளவாக உற்சாகப்படுத்துகிறான். அநேகர் வந்திருந்தனர். அவர்கள் திராட்சை ரசம் அருந்திக் கொண்டிருந்தனர். கண்ணாடி குடுவையை ஒருவருக்கொருவர் முட்டிக் கொண்டனர். வழக்கமாக நடைபெறும் விருந்து உபசரிப்பில் நடப்பது போல, கிண்டல் அடித்துக் கொண்டும், குடித்துக் கொண்டும், இடித்துக் கொண்டும், இன்றைய நாட்களில் அவர்கள் செய்கிறதுபோல, அதே போலவே நடந்து கொண்டிருந்தனர். 40. ஆனால், நான் ஒன்றை கவனிக்க நேர்ந்தது. அப்பொழுது யாரோ ஒருவர், "யார் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறது?" என்று சொல்வதை நான் கேட்கிறேன். அங்கே அந்த மூலையில் ஒருவர், தலை கவிழ்ந்தும், கைகள் கீழே தொங்கிக் கொண்டும், தலை தொங்கினவாறும் அமர்ந்திருக்கிறார். வெளியே இருக்கும் அவரது சீஷர்கள் அவரையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விருந்துக்கு அழைக்கப்பட்டவராக, அங்கே அவர் வியர்வையுடனும், அழுக்காகவும், துர்நாற்றத்துடனும், முத்தமிடப்பட்டு வரவேற்கப்படாமலும் அமர்ந்திருக்கிறார். நான் இதை எண்ணிப் பார்க்கையில் இயேசு அழுக்கான பாதங்களோடு அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். எப்படி அந்தப் பணிவிடைக்காரன், அப்படியே அவரை கடந்து செல்லும்படி விட்டுவிட்டான்? எப்படி அவனால் இயேசுவை அவ்வாறு இருக்கச் செய்ய முடிந்தது? இப்படியாகத்தான் இருந்திருக்கும். இயேசு சாதாரண உடைகளையே அணிந்திருந்தார். ஒரு கிராமத்துவாசி போல உடை அணிந்திருந்தார். ஒரு கிராமத்துவாசி போல நடந்தார். அவர்கள் ஏதோ ஒரு நாட்டுப்புறத்தான் (peasant) உள்ளே வருகிறான் என்று நினைத்திருக்க வேண்டும். 41. மேலும் இன்றைய நாட்களில், ஜனங்கள் அநேக தருணங்களில் உடை அணிந்திருக்கும் விதத்தை வைத்து அவர்களை மதிப்பீடு செய்கின்றனர். சகோதரனே, இப்பொழுது உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். எனக்குத் தெரிந்து சில உத்தமமான இருதயங்கள், நீல சட்டையின் கீழாக துடித்துக் கொண்டிருக்கிறது. அது சரியே. கழுத்துப் பட்டை பின்புறம் திரும்பி இருக்கிறதான ஒரு பளபளக்கும் கோட் உடை (tuxedo) இருக்க வேண்டியதில்லை. இல்லை ஐயா, சில நேரங்களில் தேவன் ஒரு (சாதாரண) நீல சட்டைக்குள் இருக்கிற ஒரு இருதயத்திற்குள் கூட துடிக்க முடியும். நான் நிறைய எழுப்புதல்களில் இருந்திருக்கிறேன். அதில் ஒரு பெரிய பையன், தலைமுடி அவனது கண்கள் வரை தொங்கிக் கொண்டிருக்க, அடிப்படை கல்வியறியாதவனாய், கிழிசல்கள் தைக்கப்பட்ட (patches on one another) நீல சட்டையை அணிந்தவனாய், என்னிடம் வந்து என் கரங்களைப் பிடித்து, "பிரசங்கியாரே, நானும் அதைத்தான் குறிப்பிடுகிறேன்" என்கிறான். சகோதரனே, நீங்கள் அதை நம்பலாம். அது சரி. கழுத்துப்பட்டையை திருப்பிக் கொண்டு புறாவால் போன்ற வடிவமைப்பில் உள்ள கோட்-ஐ (coat) அணிந்து கொண்டு தன்னை டாக்டர், ரெவரெண்ட் (Reverend), ஃபாதர் (Father) அல்லது ஏதோ அதைப் போன்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஒரு மிடுக்கான ஒருவனை என்னோடு வைத்துக் கொள்வதை விட, அவனையே எப்பொழுதும் என்னோடு வைத்துக் கொள்வதை விரும்புவேன். நீங்கள் எளிதாக அடையக்கூடிய நிலை இருக்கும்வரை, அந்த நபரை உங்களால் நம்ப முடிவதில்லை. அது சிறிது கடினம் தான். ஆனால், அது உண்மையானதாகும். அவர்கள் அவரை (இயேசுவை) கண்டு கொள்ள தவறிவிட்டனர். 42. ஓ, எப்படி அவனால் அதைச் செய்ய முடிந்தது? அவன் எவ்வாறு அப்படி செய்யக்கூடும்? நான் அந்த நாளில், அந்த வீட்டில் அந்த பணிவிடைக்காரனாக இருந்திருக்கலாமே என்று யாசிக்கிறேன். ஓ, நான் அவரது பாதங்களைக் கழுவி இருப்பேனே! ஆமென். நான் அங்கேயே நின்று கொண்டு அவருக்காக காத்துக் கொண்டிருந்திருப்பேனே. எனக்கு தெரிந்திருந்தால், நான் கவனித்துக் கொண்டே இருந்திருப்பேன். ஆனால் அன்றைக்கு அது இருந்த விதமாகவே... அவர் மார்க்க சம்பந்தமானவராக இருந்தார். அவர் வெறுமனே மார்க்க சம்பந்தமானவராக இருந்தார். இன்றைய நாளில் நாம் அவரைக் காண தவறி விடுவதற்கு அதுவே காரணம். நீங்கள் அதை மதவெறி என்று அழைக்கலாம். அது தேவனுடைய வல்லமையாக இருக்கும் பொழுது, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவாக அது இருக்கும் பொழுது, ஜனங்கள் அதை அடையாளம் கண்டு கொள்ள தவறிவிடுகின்றனர். நீங்கள் அதை வேடிக்கை என்று அழைத்து, பக்கவாட்டில் உருளையர்களின் கூட்டத்தோடு நான் முட்டாள்தனமாக இருக்க சாய்த்து, "அந்த பரிசுத்த வேண்டியதில்லை. நான் சபைக்குப் போகிறேன், அடுத்தவனைப் போல நானும் நல்லவனாக இருக்கிறேன்" என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் என்னுடைய இயேசுவிற்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணராதிருக்கிறீர்கள். 43. அங்க அவர் அழுக்கான பாதங்களோடு உட்கார்ந்திருக்கிறார். அது என்னை என்னவோ செய்கிறது. அவர்கள் அவரை "ஜீசு" (Jésus) என்று அழைத்தனர். ஜீசஸ் (Jesus) என்பதற்கு பதிலாக அவர்கள் "ஜீசு" என்பார்கள். அழுக்கடைந்த பாதங்களோடு இருக்கிற அந்த ஜீசுவை நான் நினைத்துப் பார்க்கிறேன். பரலோக இராஜா அழுக்கடைந்த பாதங்களுடன் இருப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகின்றதா? நல்லது, இன்றைக்கும் காரியம் அவ்விதமாகத்தான் உள்ளது, அதைக் குறித்து நீங்கள் எதுவும் செய்வதில்லை. அவர்கள் அவரைப் பற்றி பேசுகிறார்கள், அவரைப் பற்றி அவர் ஜெப கூட்டத்திற்கு அனைத்தையும் பேசுகிறார்கள். காரியங்களை நடப்பிக்கும்போதும், வரும்போதும், அவர் அவரைப் பற்றி என்ன பேசுகிறார்கள்? அவர்கள் அதைப் பற்றி பேசி, ஓ, அது பெயல்செபூல்... அது ஆவியோடு தொடர்புடையது. அது ஒரு பிசாசு... அது -- அது ஒன்றுமில்லை, சங்கை இன்னின்னாருக்கு அதைப் பற்றி எல்லாம் தெரியும்" என்று கூறுகிறார்கள். அது சரி. நீங்கள் வேதாகமத்தில் அந்த சங்கை இன்னார் இன்னார் யாராக இருந்தார்கள் என்று பாருங்கள்? அவர்களைப் பற்றிய காரியங்களில் அவருக்கு இன்னும் எந்த மாற்றமுமில்லை. 44. அழுக்கடைந்த பாதங்களுடன், வரவேற்கப்படாதவராக, ஒருவரும் அவரை சட்டை செய்யாத நிலையில் இயேசு அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார். இன்றும் அது அவ்வாறாகத்தான் உள்ளது. ஒரு பெரிய கூட்டத்திற்காக நாம் ஜெபிக்கிறோம், இயேசுவும் வருவார். ஆனால், ஒருவர் கூட அவரைக் கண்டுகொள்ள மாட்டார்கள். தேவன் அந்த இடத்திற்கு வருகிறார். "நல்லது, நமது முழு நேரமும் நமது நிகழ்ச்சிக்காக உள்ளது. செய்ய வேண்டிய விஷயங்கள் நமக்கு நிறைய இருக்கிறது. நிறைய விஷயங்களை நாம் கவனிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்." இவ்வாறு அனைத்தையும் கணக்கில் கொள்கிறோம். மேலும் இயேசு, அநேக நேரங்களில் ஒரு விருந்தினராக சபைக்கு வரும் வேளையில் ஒரு விருந்தினரைப் போல மகிழ்விக்கப்படுவதில்லை. தேவனே, அதை நாங்கள் கண்டு கொள்ள உதவி செய்யும். இயேசு மகிழ்விக்கப்படும்படி விரும்புகிறார். ஆனால், பரிசுத்த ஆவியானவர் சபைக்குள்ளாக வரும்போது, சபையை ஆசீர்வதிக்க விரும்பும்போது, ஜனங்கள் அப்படியே குளிர்ந்தும் விறைப்புடனும் இருக்கிறார்கள். அதையே தான் பரிசேயனும் செய்தான், மற்ற விஷயங்களில் அதிக அலுவலாக (too busy) இருந்தான். நாமும் செய்வதற்கென்று அநேக விஷயங்களைப் கொண்டிருக்கிறோம். நாம் குறிக்கீடாக ஏதாவது செய்து விடுவோமோ என்று பயப்படுகிறோம். கவலைப்பட வேண்டாம், நீங்கள் இயேசுவை பிரியப்படுத்தும்போது, நீங்கள் குறுக்கீடாக எதையும் செய்ய மாட்டீர்கள், தேவனுடைய திட்டத்தில் நீங்கள் சரியாக இருப்பீர்கள். நீங்கள் மனிதனுடைய திட்டத்திலிருந்து விலகியிருக்கலாம், ஆனால் இயேசுவை பிரியப்படுத்தும்போது, தேவனுடைய திட்டத்தில் இருப்பீர்கள். 45. அவர் அங்கே அழுக்கான பாதங்களுடன் காணப்பட்டார். சீஷர்களை என்னால் பார்க்க முடிகிறது. அவர்களால் உள்ளே வர இயலவில்லை. அவர்கள் அழைக்கப்படவில்லை. அவர் ஒருவர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார். பணியாள் மூலம் அதைப் பெற்றிருந்தார். அவர் நடந்து சென்று மூலையில், நாம் இன்றைக்கு அழைப்பதைப் போன்று, ஒரு "சுவற்று பூவைப்போல" (wall flowers) உட்கார்ந்தார். [wall flowers a person who has excluded at a party - விருந்தில் புறக்கணிக்கப்பட்ட ஒருவர் என்றும் பொருள்படும் - மொழிபெயர்ப்பாளர்] 'ஓ! சகோ. பிரன்ஹாமே..." என்று நீங்கள் கூறலாம். நல்லது, இன்னும் சபைகளில் அவர் அந்தவிதமாகத்தான் நடத்தப்படுகிறார். ஒரு "சுவற்று பூவாக" அல்லது சுவற்றில் தொங்கும் ஒரு படமாக அல்லது அது போன்ற ஒன்றாக அவர் (கண்டுக்கொள்ளப்படாதவராக) இருக்கிறார். ஆனால், இன்றிரவு நான் உறுதியளிக்கிறேன். ஒருவேளை நாளை இரவு எனக்குக் கடைசி இரவாக அல்லது இவ்விடத்திற்கு கடைசி இரவாக இருக்கலாம் அல்லது இன்னும் சில சமயங்கள் இருக்கலாம், எனக்குத் தெரியாது. ஆனால், நான் உறுதியாக உங்களிடம் கூறுகிறேன். மரித்தோரிலிருந்து எழுந்த அதே இயேசுவானவர் இன்றிரவு இங்கே மினியாபோலிஸ்-ல் (Minneapolis) தன்னுடைய அதே வல்லமையோடு இருக்கிறார். ஆனால் ஜனங்களோ தங்கள் முதுகை அதற்கெதிராக திருப்பி, அதை மதவெறி என்று அழைத்து, அன்றைக்கு அவர்கள் செய்தது போலவே இன்றிரவும் அவரை அதே விதமாக நடத்துகின்றனர். 46. ஓ, ஒரு பலகையைப் போல கடினமாயும், துப்பாக்கி குழலைப் போல நேராக நீண்டு கொண்டும் இருக்கிற உங்கள் பெரிய சபைகளையும், உங்கள் பாரம்பரியங்களையும் நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். அது எதையும் கூறுவதில்லை. ஓ! நீங்கள் சமூக உறவு உங்கள் பொழுது போக்குகளையும், (social parties), கேலி மற்றும் விருந்துகளையும் நகைச்சுவையையும், அது போன்ற மற்ற எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வதையே விரும்புகிறீர்கள். இவைகளை உள்ளடக்கியது ஒரு மார்க்கமல்ல (religion). அது ஒரு ஆராதனை. வெறுமனே தலைகளைத் தாழ்த்திய வண்ணம் உட்கார்ந்து, கன்று கத்துவதைப் போல, ஆமென்" என்று சத்தமிடுவது அல்ல. ஆனால், அது தேவனுடைய ஆவிக்குள்ளாகச் சென்று, ஆவியோடும், வல்லமையோடும் தேவனைத் தொழுது கொள்வதாகும். அது சரியே. ஆனால், ஓ! நாம் இன்று மிகவும் கடினமாகவும், விறைப்பாகவும் உள்ளோம். அவர்களும் அவ்விதமே இருந்தனர். நாம் அவ்வாறு செய்ய முடியாது என்று நீங்கள் அறிவீர்கள். இயேசு அழைக்கப்பட்ட பின்பு, அவர் பெற்றதான அப்படிப்பட்டதான வரவேற்பிற்குக் காரணம் அதுவே ஆகும். 47. இங்கே மினியாபோலிசிலும், அமெரிக்கா முழுதும், மற்றும் எல்லா இடங்களிலும் ஜனங்கள் உபவாசித்து, ஜெபித்து, கூக்குரலிட்டு, "ஓ, தேவனே! இறங்கி வாரும். ஓ, இயேசுவே! ஒரு எழுப்புதலுக்காக நீர் எங்களுக்கு தேவையாயிருக்கிறீர்" என்கின்றனர். அவரும் எங்காவது மகத்தான காரியங்களை செய்வார், ஆனால் அவர்களோ அவரை சிறைச்சாலைக்குள் தள்ளி விடுவார்கள். அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களை அவர்கள் பைத்தியக்காரக்கூட்டம் என்றும், பரிசுத்த உருளையர் என்றும் அழைப்பார்கள். அது ஏனென்றால், ஒரு சரியான நபரை நீங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் அந்த பணிவிடைக்காரன் அருகே தான் நடந்து சென்றார். பரிதாபமான இயேசு தனது அழுக்கான பாதங்களுடன் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார். நான் இதைக் கூறுவதை வெறுக்கிறேன்; அழைக்கப்பட்டவராய் இருந்த போதும், வரவேற்கப்படாமல், தனது அழுக்கான பாதங்களுடன் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற என்னுடைய கர்த்தரைக் குறித்து நான் நினைத்துப் பார்க்கும் போது, அது எனக்கு என்னவோ செய்கிறது. தங்களை மதப்பற்றுடையவர்கள் அல்லது அதைப் போன்றவர்கள் என்று உரிமை கோரிக்கொண்டு அதே சமயம், "ஓ, அற்புதத்தின் நாட்கள் கடந்துவிட்டது. முட்டாள்தனம், சகோதரர் பிரன்ஹாமே, அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று நீர் நம்பவில்லையா? ஓ, நீர் வெறுமனே மனரீதியாக நடந்து கொள்கிறீர், அப்படியான விஷயங்கள் எதுவுமில்லை" என்று கூறுகிற ஜனங்களைக் காண்கையில் இன்றைக்கு அது எனக்கு என்னவோ செய்கிறது. 48. நான் அவரை அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அறிந்திருக்கிறேன். அவரே மெய்யானவர் என்பதை நான் அறிவேன். அவரே எனது ஜீவன். அவரே எல்லாமுமானவர். தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளுகிற அந்த வகையான ஊக்குவித்தலை இயேசுவுக்காக செய்கிற, அரசியல் பேரணிகளை நடத்தி, சுற்றிலும் நின்று சூப் விருந்து போன்றவற்றை பெற்றிருக்கிற இந்த ஜனங்களை நான் காண்கையில், அந்த பழைய மேலறையானது காணமலேயே போய்விட்டது என்றே தோன்றுகிறது. எந்த மேலறையும் அவர்களிடம் இல்லை. நீங்கள் மிகவும் அலுவலாய் (busy) இருந்து, சபையை சுற்றி அருமையான சில காரியங்களோடு ஈடுபாடு கொள்கிறீர்கள். நீங்கள் பெற்றிருக்க வேண்டிய பண்டைய பாணியிலான ஜெபக் கூட்டங்களுக்கு பதிலாக, நீங்கள் அநேக (மற்ற) விஷயங்களை செய்வதற்கென்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இரவு விருந்துகளும், புல்வெளி விருந்துகளும், போன்றவைகளும் மேலும் இவ்வகையான மற்ற பொழுதுபோக்கு அம்சங்களும், காரியங்களும் உள்ளன. கிறிஸ்துவானவர் ஒரு பொழுதுபோக்கிற்கு உண்டானவர் அல்ல. தொழுதுகொள்வதற்குரிய தேவனாயிருக்கிறார். அதிகளவில்... அது உங்களுக்கு ஒருவேளை எரிச்சலை கொடுக்கலாம் அல்லது உங்களை வாட்டலாம். ஆனால், அது உங்களுக்கு நன்மையானதையே செய்யப் போகிறது. இன்றைக்கு நமக்கு தேவையானது என்னவென்றால், சற்று அதிகமான வாட்டுதலும், உலகத்தை உங்களிலிருந்து பெற்றுக் வெளியே வாட்டி சத்தானதை எடுத்துவிட்டு, கொள்ளும்படிக்கு சற்று அதிகமான தேவனுடைய பரிசுத்த ஆவியுமே ஆகும். இயேசு அழைக்கப்பட்ட பின்பும், உபசரிக்கப்படாமல், ஒருவரும் அவரை கவனிக்காமல், எதுவும் செய்யப்படாமல் அங்கே அவர் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார். அவர் -- அவர் - அவர் -- அவர் -- அவர் எதுவும் செய்யப்படாதவராக... அவரது கால்களில் படிந்துள்ள சாணம் மற்றும் அவரது கரங்களும், முழு சரீரமும் வியர்வையினால் ஏற்பட்ட துர்நாற்றத்தினால்... அவர் - அவர் -- அவர் -- அவர் மிகவும் விரும்பப்படத்தகாத நிலையில் காணப்பட்டார். அவர்கள் அவரை அவ்வாறு இருக்கும்படி விட்டுவிட்டனர். 49. மேலும், இன்றைக்கு தங்களை ஊழியர்கள் என்று அழைத்துக் கொள்கிற ஜனங்களாகிய நீங்கள்... அநேகர்... இப்பொழுது இது உங்களை புண்படுத்தலாம்; ஊழியர்கள் என்று உங்களை அழைத்துக் கொண்டு, "ஓ! வேதாகமம் வெறுமனே ஒரு கட்டுக்கதை, அதில் ஒன்றுமில்லை" என்று சொல்கிற மோசமான மாய்மாலகாரர்களை, விசுவாசமற்ற உலகத்தை அனுமதிக்கிறீர்கள். ஒருத்துவக்காரராகிய உங்களுக்கு, தேவனை அறியாத ஜனங்களாகிய உங்களுக்கு நான் ஒன்றைக் கூறட்டும். நீங்கள் வெறுமனே தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, அதின் பெலனை மறுதலிக்கிறீர்கள். நீங்கள் ஏன் உங்களை சுத்திகரித்துக் கொள்ளக் கூடாது? நீங்கள் ஏன் சுவிசேஷத்தை பிரசிங்கிக்கக் கூடாது? அப்பொழுது இருந்ததை போலவே, இன்றிரவும் அதே மெய்யான இயேசுவாக அவர் இருக்கிறார். அவ்விதமான அழுக்கடைந்த நிலையில் அவரை விட்டுவிட வேண்டாம். நீங்கள் உங்கள் இல்லத்துக்கு அவரை அழைக்க உரிமை கோருகிறீர்கள்; உங்கள் சபைக்கு அவரை அழைக்க உரிமை கோருகிறீர்கள், பின்னர் அவர் வரும்போதோ, இது தான் நீங்கள் அவரை நடத்துகிற விதம். இன்றைக்கும் பரிசேயர்கள் அவ்விதமே தான் இருக்கின்றனர். எங்கும் சென்று பரிசேயர்களை கடிந்து கொள்கிறீர்கள். இயேசு, "நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளை சிங்காரிக்கிறீர்கள்: அவர்களை கல்லறைகளுக்குள் வைத்தவர்களே நீங்கள்தான்" என்றார். அது சரியே. 50. இன்று நமக்கு தேவை என்னவெனில், கிறிஸ்துவாகிய பரிசுத்த ஆவியின் ஊக்குவித்தலேயாகும். அங்கே அவர் அழுக்கான பாதங்களுடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அங்கே இருந்த அவ்வளவு பெரிய கூட்டத்தில், தான் வரவேற்கப்படாமல் இருப்பதாக உணர்ந்தார். இன்றைக்கும் அவ்விதமே அவர் உணர்கிறார். ஒரு பெரிய மகத்தான விறைப்பான கூட்டமானது, நகைச்சுவைகளைப் பேசி, எல்லாவிதமான மதச்சார்புடைய விஷயங்கள் மற்றும் அதுபோன்ற அனைத்துக் காரியங்களையும் செய்கிறது, அவரையோ தனிமையில் விட்டுவிட்டது. தான் வரவேற்கப்படுவதாக அவர் உணரவில்லை. இங்கே சுற்றிலுமுள்ள பெரிய விறைப்பான சபைகளை விட, எங்கோ ஒரு வீதியிலுள்ள ஒரு சிறிய குழுவில் இன்றிரவு, தான் அதிகமாக வரவேற்கப்படுவதாக அவர் உணர்வார். அது சரியே. அவர்கள் அவரைக் குறித்து வெட்கப்படுவதில்லை. நீங்கள் அவர்களிடையே சிறந்த அந்தஸ்தோடு இருப்பதாக நினைக்கிறீர்கள், அப்படி இருக்கிறீர்களா இல்லையா என்று எனக்குத் தெரியாது; அன்றைக்கு அது சிறந்த அந்தஸ்தாக இல்லை. 51. அங்கே அவர்கள் தங்கள் தண்ணீர் குவளைகளை (glasses) முட்டிக் கொண்டும், குடித்துக் கொண்டும், அவ்வாறு செய்து கொண்டும் இருந்தார்கள். அவர்கள், "இப்போது பரிசேயன் ஜோசப் அவர்களே, உங்களுக்கு விஷயம் தெரியுமா? நான் சொல்லுகிறேன், அன்றொரு நாள் அங்கே நடந்த ஜெபக்கூட்டத்தில், அந்த... ஹா... ஹா... அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஜோன்ஸ் ஒரு முறை அங்கே செய்த ஒன்றை குறித்து நான் சொல்லப் போகிறேன்..." என்று அதைப் போன்ற காரியங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கும் அவர்கள் கூடிவரும்போது, அப்படிப்பட்ட காரியங்களையே அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். நான், சில நாட்களுக்கு முன்பு, இங்கேயுள்ள ஒரு பெரிய அருமையான சபைக்குச் சென்றிருந்தேன், இங்குள்ள மக்களைப் போல இரண்டு மடங்கு ஜனக்கூட்டம் அங்கே இருந்தது, அது அந்த நகரத்தின் நகரத்தின் ஆவிக்குரிய நன்மைகளுக்காக இருக்க வேண்டியிருந்தது. அவர்கள் என்ன செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் என்னை அழைத்ததைக் குறித்து நான் வியப்படைந்தேன். ஆனால் நான் அங்கே சென்றபோது அவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியுமா? ஒரு பிரபலமாக இருக்கிற ஒரு ஸ்தாபன சபையில் அவர்கள், "இப்பொழுது நாம் தேசத்தில் சிறந்தவர்களில் ஒருவரை நாம் இங்கு கொண்டிருக்கவில்லை, மாறாக, தேசத்திலேயே மிகவும் கிட்டார் (Guitar) தலைசிறந்த மற்றும் சுரமண்டலம் இசைப்பவரை பெற்றிருக்கிறோம்" என்பதாக கூறினார்கள். நான், "நல்லது, அது அருமையானது. அவர்கள் என்ன வாசிப்பார்கள் என்று பார்க்கலாம்" என்று நினைத்தேன். அவர்கள் என்ன வாசித்தார்கள் தெரியுமா? தேவனே எனது நியாயாதிபதி. ஊழிய சம்பந்தப்பட்ட ஒரு கூடுகையில், பலிபீடத்திற்குப் பின்னால் இருந்து கொண்டு அவர்கள், "வைக்கோலில் வான்கோழி" என்றதான பாடலை இசைத்தனர். ஓ, என்னே! ['Turkey in the straw''வைக்கோலில் வான்கோழி' என்பது ஒரு அமெரிக்க நாட்டுப்புற பாடல் ஆகும் . மொழி.] மேலும் அவர், "நகரத்திலிருந்து ஒரு பிரபலமான சபையிலிருந்து பிரபலமான நால்வர் குழு வந்திருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது ஒரு பாடலைப் பாடப் போகிறார்கள்" என்று கூறினார். அவர்கள் என்ன பாடினார்கள் என்று தெரியுமா? "மலைத்தொடரின் மேல் வீடு." ('Home on the range' 'மலைத்தொடரின் மேல் வீடு' என்பது அமெரிக்க நகைச்சுலை சினிமா பாடல் - மொழி.] அது சபைக்கு சம்பந்தப்பட்டது அல்ல. இன்றைக்கு ஜனங்களுக்கு என்ன ஆயிற்று? பின்னர் நான் தளத்துக்கு வந்து விட்டேன். அவர்கள் என்னை வெளியே துரத்தி விட்டார்கள். தேசத்திலுள்ள உங்களுக்கு வெட்கக்கேடு, ஆவிக்குரிய தலைவர்களாகிய பலிபீடத்திற்கு பின்னால், 'வைக்கோலில் வான்கோழி' என்பதை இசைக்கிறீர்களே. நீங்கள் என்னை வெறுப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. நீங்கள் தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்காமல் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. உங்களால் அதைச் செய்ய முடியாது. அதை விசுவாசிப்பதற்கு உங்களிடத்தில் ஒன்றுமில்லை. நான் அவர்களிடம், "சுத்திகரிக்கப்பட உங்களுக்கு தேவைப்படுவது என்னவென்றால், பழைய பாணியிலான பீட அழைப்பும், பீடத்தைச் சுற்றிலுமுள்ள பிரசங்கிமார்களின் கூட்டமாகிய நீங்கள் தேவனுடன் சரியாவதே" என்று கூறினேன். அவர் இவ்வாறு மேசையை தட்டி, "உட்காருங்கள், உட்காருங்கள்" என்று சொன்னார், அதற்கு நான், "நான் இப்பொழுது தளத்திற்கு வந்து விட்டேன்" என்றேன். அவர்கள் என்னை வெளியே துரத்தி விட்டார்கள், எது சரி என்பதை நான் எப்படியாயினும் சொல்லியே ஆக வேண்டும். எப்படியிருந்தாலும் அது அவர்களுடன் நியாயத்தீர்ப்பு வரை செல்லும். நிச்சயமாக. ஆம் ஐயா. 52. இன்றைக்கு நமக்கு வேண்டுவது என்னவென்றால்: ஒரு சுத்திகரிப்பு, பரிசுத்த ஆயத்தமாகிற தேவனுடைய வீடு, கர்த்தராகிய இயேசுவின் ஆவியின் உற்சாகப்படுத்துதலுக்கு வல்லமை. நாம் கேட்டுக் கொண்டோம், கெஞ்சினோம், மேலும் விண்ணப்பித்தோம், ஆனால், அவர் வரும்போதோ அவரை புறந்தள்ளுகிறோம். ஆமென். அது உண்மைதான். என்னே! ஒரு பரிதாபம். அழுக்கான பாதங்களுடன், துர்நாற்றம் வீச, ஒருவரும் கண்டு கொள்ளாத நிலையில் இயேசு அங்கே அவரை உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் அங்கே ஜனங்களுக்கு ஊழியம் செய்து கொண்டிருந்த அவருடைய ஸ்தலத்தை விட்டுவிட்டு, இரண்டு நாட்களாக வெயிலில் நடந்து வந்திருந்தார், சற்று முன்கூட்டியே அவர் கிளம்ப வேண்டியிருந்தது, ஏனெனில், அவர்-அவர் ஒருபோதும் தனது சந்திக்கும் திட்டத்தை (appointment) தவறவிட்டதில்லை. அவர் எப்பொழுதுமே தனது சந்திக்கும் திட்டங்களை காத்துக் கொள்கிறார். அதற்காக நான் அவரை நேசிக்கிறேன். அவர் தமது சந்திக்கும் திட்டங்களை காத்துக் கொள்கிறார். அதன் காரணமாகத்தான் இன்றிரவு நான் அவரில் அதிக நம்பிக்கை (confidence) கொண்டுள்ளேன். அவர் கொள்கிறார். காத்துக் திட்டங்களை தமது சந்திக்கும் அல்லேலூயா. அவர் ஒருபோதும் தவறினதில்லை, அவர் ஒருபோதும் தவறவும் மாட்டார். 53. ஞாபகம் கொள்ளுங்கள், மனிதனே ஸ்திரீயே, பையனே பெண்ணே, நீங்களும் அவரோடு கூட ஒரு சந்திப்பின் ஏற்பாட்டை பெற்றுள்ளீர்கள். ஒன்று சமாதானத்தோடு இங்கேயே அவரை சந்திக்கப் போகிறீர்கள் அல்லது நியாயத்தீர்ப்பில் அவரை சந்திப்பின் உங்களுடைய சந்திக்கப் போகிறீர்கள். திட்டத்தை காத்துக் கொள்வீர்கள். அந்த ஒரு விஷயத்தை நீங்கள் செய்யத்தான் போகிறீர்கள். அது சரியே. அவரும் தம்முடையதை காத்துக் கொள்கிறார். குறித்த நேரத்தில் அவர் அங்கே இருந்தார், ஒரு நிமிடம் கூட தாமதமாக வரவில்லை. அவர் அந்த விருந்துக்கு சரியான நேரத்தில் வந்திருந்தார். கவனிக்கப்படாத நிலையில் (unentertained) அங்கே அவர் காணப்பட்டார். கீழே அந்த வீதியில் அங்கே உள்ள ஒரு காட்சியை கவனியுங்கள். ஒரு கதவு திறக்கப்படுவதை காண்கிறேன், ஒரு சிறிய குடிசையின் கதவு திறக்கப்பட்டு அதிலிருந்து படிக்கட்டுகள் இறங்குகின்றன. ஒரு ஸ்திரீ கீழே இறங்கி வருவதைக் காண்கிறேன். அவள் பார்ப்பதற்கு ஒருவித நாணமுற்றவளாக காணப்பட்டாள். அவள் தன் முகத்தை முக்காடிட்டிருந்தாள். அவள், "இன்றிரவு அமைதியாக இருக்கிறதே, என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. வீதியில் ஒருவரும் இல்லாதது போல் இருக்கிறது" என்று கூறினாள். அவள் ஒரு விபச்சாரியாய் இருந்தாள். அவள் பட்டணம் எங்கும் நடந்து, "ஓ, அது சரிதான். போதகராகிய டாக்டர் பரிசேயன் அங்கு ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்துள்ளார்" என்று கூறினாள். மேலும் அவள், "நான் அந்த வளைவின் கடைசி வரை சென்றால் அது என்னவென்று பார்க்க முடியும் என நம்புகிறேன்" என்று கூறினாள். பின்னர் அவள் நிமிர்ந்து பார்த்தாள். ஓ, அந்த வாசனையானது, எல்லா ஏழைகளும் வெளியே நின்று கொண்டிருக்க, அவர்கள் வாயில் எச்சில் ஊற, அந்த பரிசேயர்களோ, அருமையான ஆட்டுக்கறியை சாப்பிட்டுக் கொண்டும், திராட்சை ரசத்தை பருகிக் கொண்டும், ஒரு மகத்தான நேரத்தை உடையவர்களாய் இருந்தனர். அவளாலும் அந்த வாசனையை நுகர முடிந்தது. அவள், "ஓ, மிகவும் நல்ல வாசனை. இன்னும் சற்று அருகில் நடந்து செல்ல முடியுமா என வியக்கிறேன். நான் முகத்தை முக்காடிட்டு மறைத்திருப்பதால் யாருக்கும் என்னைத் தெரியாது, ஏனெனில் இந்த பட்டணத்தில் எனக்கு மிகவும் கெட்ட பெயர் தான் இருக்கிறது" என்று கூறிக் கொண்டாள். 54. ஆகவே, அவள் இன்னும் சற்று அருகில் செல்கிறாள், "ஓ, அற்புதமாக இருக்கிறது" என்றாள். தன்னை வெளியே தள்ளுகிற யாரோ ஒருவரிடமிருந்து நழுவிச் செல்கிறாள். இரண்டு மனிதர்களுக்கு இடையே நழுவிச் சென்று, அவள், ஓ, அவர்களை கவனியுங்கள். இதுதான் விருந்து என்பது. எனவே நான்... அதுதான் அந்த செல்வந்தனான பரிசேயன். இவரால் மட்டுமே இவ்விதம் செய்ய முடியும். ஆனால் அந்த தரித்திரர்களை நோக்கிப் பாருங்கள். சிறு குழந்தையுடன் அங்கே இருக்கும் அந்த தாயைப் பாருங்கள். அவள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பது வியப்பாய் உள்ளது. அது வியாதியாய் இருப்பது போல் காணப்படுகிறது. அந்த உடல்நிலை சரியில்லாத குழந்தையை இங்கு எதற்காக கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாள் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது. ஏன் என்று எனக்கு புரியவில்லை. ஏன்- ஏன்? அங்கே அந்த முடவன் இருக்கிறான், அங்கே ஒரு குருடன் கூட இருக்கிறான், அவன் வழக்கமாக பிச்சை எடுத்துக் கொண்டு வீதியில் இருப்பவன்தான். அவன் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று நான் ஆச்சரியப்படுகிறேன். பரிசேயனுடைய வீட்டைச் சுற்றி அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான். அவன் எதற்காக இங்கு இருக்கிறான் என்று தெரியவில்லையே" என்றாள். 55. மேலும், அவள் நிமிர்ந்து பார்த்தாள். "இல்லை. இல்லை...' என்றவள் தன் கண்களைக் கசக்கி மீண்டும் பார்த்தாள். "அங்கே -- அங்கே ஏதோ ஒன்று தவறானது போலக் காணப்படுகிறது. நிச்சயமாக நான் -- நான் பார்ப்பது சரியானதாக இல்லையே" என்றாள். அவள் மறுபடியும் அங்கே பார்க்கிறாள். அவள், "அது அவரேதான், அது அவரேதான், ஓ! அவரைப் பாருங்கள், நல்லது. நிச்சயமாக அவர் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் இங்கு வந்திருக்க மாட்டார். ஆனால், அவர்கள் அவருக்கு எந்த கவனத்தையும் செலுத்தாமல் இருக்கிறார்களே, அவர் எவ்வளவு சோகமாக அந்த மூலையில் தலையை கவிழ்த்தி, எளிமையாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்பதை கவனியுங்கள்" என்று கூறினாள். 56. மேலும், எழுந்த போது அவருடைய பாதங்கள்-முகமெல்லாம் அழுக்கோடும், ஒரு நாடோடியைப் போல நடந்து வந்து அங்கே வருவதற்கு அவர் எடுத்த முயற்சியினால் வியர்த்தும் காணப்படுகிறது. ஒருவரும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. மேலும் அவள், "இது -- இது... நான் -- நான், நிச்சயமாக இன்றிரவில் நான் ஒரு நல்ல மனநிலையில் இல்லை. அது அந்த நான் நான் நான்... அது நிச்சயமாக ஆம், அப்படித்தான் இருக்க தீர்க்கதரிசியாக இருக்காது. வேண்டும். ஓ, அவர்... அவர்கள் அவரை உபசரிக்காமலிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் -- அவர் -- அவர் அவர் முழுவதும் அழுக்காக காணப்படுகிறார். அவர்கள் இன்னும் அவரைக் கழுவ- அவரை சுத்தம் செய்யவில்லை. காரணம் அதுதான்" என்று கூறினாள். 57. மேலும், அவள் தனது சிறிய முக்காட்டினால் மீண்டும் தன் முகத்தை மூடிக்கொண்டாள். பின்னர் வீதியிலே செல்கிறாள், அவளது வீட்டில் உள்ள கிரீச் என்று சத்தத்தை உண்டுபண்ணும் படிக்கட்டுகள் வழியே ஏறிச் செல்கிறாள். அவள் கதவை மூடிக் கொள்கிறாள். ஒரு சிறிய பெட்டியை நோக்கி நடக்கிறாள். அதன் கதவை அவள் திறந்து, அதிலிருந்து வெளியே இதைப் போன்ற ஒரு சிறிய பை மூட்டையை எடுக்கிறாள். ஒரு சுருக்கு பையைப் போன்று இருக்கலாம். அவள் கீழே உட்காருகிறாள். அது சல-சலவென்று ஒலித்தது. அது நாணயங்கள். அவளுக்கு இருந்தது எல்லாம் அதுதான். அவள் அதை நோக்கிப் பார்த்தாள். அவள் அதை மேஜையின் மீது கொட்டினாள். அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. அவள், "அவரைப் பற்றி ஏதோ ஒரு காரியம் இருக்கிறது. மற்றவர்களிலிருந்து அவர் வித்தியாசமானவராகக் காணப்பட்டார்" என்று கூறினாள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் யாராக இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை; இயேசுவை மாத்திரம் நேராக காணக்கூடிய சந்தர்ப்பம் உங்களுக்குக் கிட்டுமானால், அது உங்களை மாற்றி விடும். உங்களிலிருந்து ஒரு வித்தியாசத்தை அது உண்டாக்கும். அவள், "ஓ! நான் ஏன் அழுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் - நான் அவருக்காக ஏதாவதை செய்தாக வேண்டும். அவர் அந்த நிலையில் இருப்பது அவருக்கு சரியானதல்ல. எனக்குள் ஏதோவொன்று அவர்... அது சரியானதல்ல என்று கூறுகிறது. இது குறித்து நான் ஏதோவொன்றை செய்தே ஆக வேண்டும்" என்று சொல்லிக் கொண்டாள். எனவே அவள் பணத்தை எடுத்துக் கொண்டு, கதவை நோக்கி வந்தாள். மேலும் அவள், "ஓ! இதை நான் செய்ய முடியாது, இதை என்னால் செய்யவே முடியாது, ஏனெனில் அவர் ஒரு தீர்க்கதரிசி. இந்த பணம் எங்கிருந்து எனக்குக் கிடைத்தது என்று அவருக்குத் தெரியும். இது எனக்கு எப்படி வந்தது என்பதும் அவருக்குத் தெரியும், இது எப்படி எனக்குக் கிடைத்தது என்பதையும் அவர் அறிவார். மேலும் நான் -- நான்... வெறுமனே... ஆனால் எனக்கு இருப்பதெல்லாம் இவ்வளவுதான். என்னால் செய்ய முடிந்ததெல்லாம் இவ்வளவுதான், மேலும் என் இருதயத்தில் ஏதோ ஒன்று, 'நான் செய்தே ஆக வேண்டும்' என்று கூறுகிறது" என்று கூறினாள். அதுதான் வழி, அதுதான் காரியம். 58. ஸ்திரீகளைப் பற்றினதான ஒரு விஷயம் என்னவென்றால் - அது புருஷர்களிடமிருந்து வித்தியாசப்பட்ட காரியமாக தென்படுகிறது. அவர்கள், சில சமயம் அதிகமாக ஆவிக்கு உடன்பட்டவர்களாக காணப்படுகிறார்கள். அது சரியே. அவர்கள் அவர்கள் அதை விரைவாக பிடித்துக் கொள்பவர்களாக நான் இதை காணப்படுகிறார்கள். எனவே அவள், "ஓ! நான் நிச்சயம் செய்ய வேண்டும். ஏதோவொன்று எனக்குள், 'நான் செய்தே ஆக வேண்டும்' என்று கூறுகிறது" என்றாள். எனவே அவள் அந்த சிறிய பையை மீண்டும் எடுத்து, பணத்தை அதில் சுற்றி, அதை தன் மடியில் வைத்துக் கொண்டு, தனது முக்காட்டை கீழே இழுத்து விட்டு, க்ரீச் என்று சத்தமிடுகிற அந்த படிக்கட்டுகளில் இறங்கி வந்து, நேராக வாசனை திரவியங்கள் விற்கும் கடைக்குச் செல்கிறாள். 59. அவள் அங்கே சென்றபோது, நீண்ட வளைந்த மூக்குடைய ஒருவன் அங்கே உட்கார்ந்திருந்தான். உங்களுக்கு தெரியுமா... அந்த நாள் மிகவும் ஒரு மோசமான நாளாய் இருந்தது. ஒருவரும் வாசனை திரவியங்களை வாங்க வராதிருந்தார்கள். அவன் மிகவும் கடுகடுப்பாக காணப்பட்டான். அவள் கதவின் வழியாக உள்ளே செல்கிறாள். அவன் அவளை ஏறெடுத்துப் பார்த்து, "என்னுடைய வாடிக்கையாளரைப் பாருங்கள், ஹூம்! என்னே! இப்போது என்னுடைய வாடிக்கையாளராக யார் வந்திருக்கிறார்கள் என்பதை பாருங்கள்" என்று புலம்பினான். "உங்களுக்கு நான் உதவலாமா?" என்பதான ஒரு பண்புள்ள மனிதனுடைய மரியாதையோடு அவன் அணுகாமல், மாறாக, "உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டான். அதற்கு அவள், "கனிவான ஐயா..." என்றாள். அவள் அழுது கொண்டு இருந்திருக்கிறாள் என்பதை அவன் கவனித்தான். "எதற்காக இவள் அழுது கொண்டிருக்கிறாள்?" என்று அவன் யோசித்தான். 60. அவள், "கனிவான ஐயா, உங்கள் கடையிலேயே உள்ள மிகச் சிறந்த வெள்ளைக்கல் பரணி ஒன்று எனக்கு வேண்டும். சிறந்ததில் ஒன்று எனக்கு வேண்டாம். ஆனால், உங்களிடத்தில் இருப்பதிலேயே மிகவும் சிறந்த ஒன்று தான் எனக்கு வேண்டும்" என்று கேட்டாள். அதுதான் வழி. அவருக்கு உங்களுடைய சிறந்ததைக் கொடுங்கள். உங்களிடத்தில் இருக்கும் சிறந்ததிற்கே அவர் ஏற்றவராய் இருக்கிறார். நாம் அவருக்கு இரண்டாவது ஸ்தானத்தைத் தருகிறோம். நாம் அவருக்கு கடைசி ஸ்தானத்தைத் தருகிறோம். ஆனால் சிறந்த ஒன்றுக்கே அவர் ஏற்றவராய் இருக்கிறார். பாருங்கள், ஏதோ ஒன்று அவளை தொட்டிருந்தது. அவள் இயேசுவை நேரடியாக பார்த்தாள். அவள், "உங்களிடத்திலிருக்கும் சிறந்த ஒன்று எனக்கு வேண்டும்" என்றாள். நாமோ நமக்கு இருக்கும் கடைசியானதையே தருகிறோம். 61. முதலாவது நீங்கள் உங்களுக்கானதை எடுத்துக் கொள்கிறீர்கள், பின்னர் வெளியே சென்று, செலவு செய்து, உங்களுடைய சிறந்த நேரத்தை பெற்றுக் கொள்கிறீர்கள். அதன் பின்னர் ஞாயிறு காலை சபைக்குச் சென்று கால் பாகத்தை மாத்திரம் (quarter) செலுத்துகிறீர்கள். ஆனால், நீங்கள் போய் ஐம்பது டாலர்கள் மதிப்புள்ள பரிசுகளை உங்கள் பக்கத்து வீட்டில் உள்ள ஜோன்ஸ்-க்கு வாங்கிக் கொடுக்கிறீர்கள், அல்லது சமூகத்தில் அந்தஸ்தைப் பெற போதுமான ஏதாவது ஒன்றை செய்கிறீர்கள். கொடுக்கிறீர்கள். இயேசுவுக்கோ கடைசியானதையே ஏற்றதாகும். உங்களிடம் உள்ள சிறந்ததே அவருக்கு அவளிடம் இருந்ததெல்லாம் அவ்வளவுதான். உங்களையும், உங்களுக்குண்டான எல்லாவற்றிற்கும் அவரே ஏற்புடையவராயிருக்கிறார். அதுதான் நாம் எங்கும் செல்ல முடியாததற்கான காரணமாக இருக்கிறது. அவள், 'எனக்கு உங்களிடத்தில் உள்ளதிலேயே சிறந்ததுதான் வேண்டும்" என்று கேட்டாள். அதற்கு அவன், "நல்லது, நான் முதலில் உன்னிடம் எவ்வளவு பணம் உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்" என்றாள். 62. எனவே, அவள் அதை வெளியே கொட்ட, அவன் அதை எண்ணினான். முப்பது வெள்ளிக் காசுகள் இருந்தன. [Roman denarii - ரோமானிய 'தினாரி வெள்ளிக் காசுகள் - மொழி.] அது மிகவும் சரியானது. அவன் மேலே இருந்த பெட்டியை எடுத்து அதிலிருந்த வாசனை திரவியத்தை எடுத்து, வெள்ளைக்கல் பரணியில் இந்த விதமாக அவளிடத்தில் கொடுத்தான். அவள் அதை தனது மடியில் வைத்துக் கொண்டாள். அவள் சற்று அங்கேயே தரித்திருந்தாள். தனது கண்களிலிருந்து வந்த கண்ணீரைத் துடைத்தவாறு, கதவிற்கு வெளியே பார்க்கிறாள். இந்தப் புறமும், அந்தப் புறமும் பார்த்து, யாரும் வரவில்லை என்பதை கவனிக்கிறாள்; தனது முக்காட்டை கீழே இழுத்து தனது முகத்தை மூடிக் கொள்கிறாள். அவன் - அவன், "அவள் எங்கே போகிறாள் என்பது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறதே?" என்று கூறிக் கொண்டான். அவள் வெளியே வந்து, அந்த வீதியில் தன்னால் முடிந்த அளவு வேகமாக நடக்க ஆரம்பிப்பதை நான் காண்கிறேன். இரண்டு மனிதர்கள் மூலையில் நின்று கொண்டு, "பார், பார், பார், பார், பார், அங்கு யார் நடந்து போகிறது?'' என்றார்கள். நீங்கள் எப்போதுமே தள்ளப்பட்ட மற்றும் வெளிஜனங்களை இகழ்ச்சியாக பேசுவதையே விரும்புகிறீர்கள். 63. நான் ஒன்றைச் சொல்கிறேன், ஒரு மோசமான ஸ்திரீ இருப்பதற்கு முன்பாக, ஒரு மோசமான ஆண் இருந்திருக்க வேண்டும். அது சரியே. ஞாபகம் கொள்ளுங்கள், அது யாரோ தாயினுடைய செல்லப் பிள்ளை. இன்றைய நாட்களில் சபையானது இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் என்னவெனில், நீங்கள் சபையில் உயர்ந்த வகுப்பினரை நாடுகிறீர்கள். ஆனால், நீங்கள் தவறிவிட்டீர்கள். சபையானது விபச்சாரி, விலைமாது, கள்ளச்சாராயத்தில் ஈடுபட்டுள்ளோர், மேலும் நகரத்தில் என்ன இருக்கிறதோ அவற்றை ஏற்றுக்கொள்ள தவறுகிறது. அங்குதான் நாம் போக வேண்டுமென இயேசுவானவர் விரும்புகிறார். அங்குள்ளவர்களைத் தான் நாம் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆனால் நாமோ, ஓ, பணம் படைத்த மனிதர், அதிகமாக கொடுக்கக் கூடியவர், சபையினுடைய கடன்கள் முதலானவற்றை செலுத்தித் தீர்க்கக் கூடியவர் போன்றோர் நமக்கு வேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் அதை 'உயர் வகுப்பினர்' (upper crust) என்று அழைக்கிறீர்கள். அங்கே ஏகப்பட்ட மோசமான காரியங்கள் (a lot of crust) காணப்படும். அது சரிதான். உயர்வு என்பது எப்படி இருக்கும் என்பதை அறியாதவர்கள், ஏகப்பட்ட மோசமான காரியங்கள் அங்கே காணப்படும். நாம் வழிச்சந்திகளிலும், பெரும்பாதைகளிலும், வேலிகளருகிலும் போய் ஜனங்களை கிறிஸ்துவிடம் வரும்படி பலவந்தம் பண்ண வேண்டும். 64. அவள் முன்னேறிச் செல்கிறாள். அவள் தன் பாதையில் முன்னேறிச் செல்வதை நான் காண்கிறேன். அவள் உள்ளே பார்க்கிறாள். அவர்களுக்கு மேலாக தன் தலையை உயர்த்திப் பார்க்கிறாள். இப்போது அவள், "ஒரு நிமிடம்... நான் இதைச் செய்யக்கூடாது. என்னிடம் ஏதோ ஒன்று தவறாக இருக்க வேண்டும். நான் நான் இன்றிரவு நான் நானாக இல்லை. மேலும் நான் - நான் அங்கே உள்ளே போக முடியாது; என்னை அவர்கள் வெளியே துரத்தி விடுவார்கள்" என்றாள். ஆனால் மீண்டும் அவள் அங்கே நோக்கிப் பார்க்கிறாள். அங்கே அவர் எளிமையாக உட்கார்ந்து கொண்டு, தனது அழுக்கான கரங்களை பார்த்துக் கொண்டிருந்தார். ஜனங்கள் அவரை கடந்து சென்று கொண்டிருக்கின்றனர், மற்ற எல்லாரும் ஆட்டுக்கறியை சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்; அவர் அந்த விருந்தில்தான் இருக்கிறார், இருப்பினும் அவர்கள் அவருக்கு எதையும் கொடுக்கவும் இல்லை, அவர் கொள்ளவுமில்லை. வெறுமனே உட்காரும்படி விட்டுவிட்டனர். எதையும் பெற்றுக் எல்லோரும் அவரவர் மேஜைகளில் இருந்தனர், எப்படியாக அவர்கள் சாவகாசமாக உட்கார்ந்து சாப்பிடுவார்கள்... அது உங்கள் பையன்களுக்கு அருமையாக இருக்கும். இப்போது கவனியுங்கள். பாலஸ்தீனத்தில் அவர்கள் சாவகாசமாக உட்கார்ந்து இந்த விதமாக சாப்பிடுவார்கள், மெத்தை இருக்கையில் (couch) சாவகாசமாக உட்கார்ந்து கொண்டு (lying down- படுத்து கொண்டு) சாப்பிடுவார்கள். எனவே எல்லோரும் சாவகாசமாக உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர், பரிதாபமான இயேசு வெறுமனே அங்கே உட்கார்ந்து பார்த்துக் கொண்டு... 65. அவள், "ஓ! நான் உள்ளே சென்றால், அந்தப் பரிசேயன் என்னை வெளியே துரத்தி விடுவான். அவ்வளவுதான். ஆனால் என்னால் - என்னால் பொருத்துக் கொள்ள முடியவில்லை; என்னால் வெறுமனே பொருத்துக் கொள்ள முடியாது. அவர் பார்க்கிற விதத்தை கவனியுங்கள். அவர் சுற்றிலும் பார்க்கும் கண்களை கவனியுங்கள்" என்றாள். போது, அவரது சோகக் மேலும் அவள், பேதுரு, யாக்கோபு மற்றும் அவர்கள் அங்கே கொண்டு துள்ளிக் கொண்டிருப்பதை (prancing) நின்று பார்க்கிறாள். அவர் பேதுருவையும் மற்றவரையும் நோக்கிப் பார்த்து, மீண்டும் கீழே குனிந்து விடுவார், (எதற்கோ) காத்துக் கொண்டிருக்கிறார். 66. அவள், "இதற்கு மேல் என்னால் பொருத்துக் கொள்ள முடியாது" என்று சொல்லி, "நான் உள்ளே போகத்தான் வேண்டும். ஆனால் நான் உள்ளே போனால், என்னைப் போன்ற ஒரு ஸ்திரீ அவருக்கு முன்பாக போவது என்பது... என்னால் அதைச் செய்ய முடியாது" என்றாள். சிறிது நேரம் கழித்து அவள், கலிலேயாவில், 'வருத்தப்பட்டுப் "ஆனால், பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைபாறுதல் தருவேன். யாருக்கெல்லாம் வேண்டுமோ அவர்கள் எல்லாரும் வரலாம்' என்று அவர் கூறினது என் ஞாபகத்திற்கு வருகிறது. அப்படியென்றால் நிச்சயமாக அது என்னைத்தான் குறிக்கிறது. யாருக்கெல்லாம் வேண்டுமோ அது நான்தான். நிச்சயமாக வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறது நான்தான். அவர் என்னைத்தான் வரச் சொன்னார். எனவே நான் போகிறேன்" என்றாள். அதைப் போன்ற எண்ணத்தை நீங்கள் இன்றிரவு பெற வேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன். சரியாக அந்த பரிசேய கூட்டத்தினூடாக அவள் சென்றாள். தனது முழங்கையால் வழியை உண்டுபண்ணிக் கொண்டு இயேசுவை நோக்கிச் செல்கிறாள். தேவனே இன்றிரவு எங்களுக்கு உதவிசெய்யும். "இன்றிரவு சபையினுடைய எல்லா விறைப்பான திட்டங்களையும், எல்லா கடினமான காரியங்களையும் விலக்கி தள்ளிவிட்டு கிறிஸ்துவிடம் வருகிறோம்" என்று கூறுங்கள். ஆமென். ஆம் ஐயா. 67. வழிநெடுக அவள் அந்த பரிசேயர்களை தள்ளி விட்டு உள்ளே சென்றாள். பின்னர், இயேசு இருந்த இடத்திற்கு நேராகச் சென்றடைந்தாள். அந்த வெள்ளைக்கல் பரணியை உடைத்து அதை அவர் மீது ஊற்றினாள். பின்னர் தரையில் அவருடைய பாதத்தில் விழுந்து அழத் துவங்கினாள். அவருடைய பாதத்தில் தன் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் (patting). மேலும் அவள்... அவளால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் அவள் அழுதுக் கொண்டே, அவரது பாதத்தை துடைக்க ஆரம்பித்தாள். [சகோ. பிரன்ஹாம் முத்தமிடும் ஓசையை ஏற்படுத்துகிறார் - ஆசி.] அவரது பாதத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்... அருமை, அவள் ஜீவ ஊற்றண்டையில் இருந்தாள். தனக்கு எப்போதும் உதவி கிடைக்கக் கூடிய அந்த இடத்தில் தானே அவள் இருந்தாள். அவள் கட்டுப்பாடற்ற உணர்ச்சியுள்ளவளாய் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவளால் தன்னை கட்டுப்படுத்த இருந்ததில் முடியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தேவனே, எப்படியாவது நாங்கள் இரட்சிக்கப்படுவதற்கு அளவிற்கு அப்படிப்பட்ட கட்டுப்படுத்த முடியாத நிலைக்குள் போதுமான நாங்கள் செல்ல உதவி செய்யும். 68. நான் இரட்சிக்கப்பட்டதைக் குறித்து நினைவு கூறுகிறேன். நான் என்னை அடக்கிக் கொள்ள முடியாத நிலையில் இருந்தேன். நான் விறைத்துப் போன சடங்காச்சார நிகழ்வுகளுக்கு எனது கவனத்தை செலுத்தவில்லை, அவளும் அதையே செய்தாள். அந்த விருந்திலேயே அவள் உடைந்து போனாள். தான் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவள் தொடர்ந்து சென்றாள். நாம் அப்படிப்பட்ட ஜனங்களைப் பெற்றிருக்கிறோம், அப்படிப்பட்ட தீர்மானத்தோடே, நீங்கள் இரட்சிக்கப்பட போகிறீர்கள். ஆம், ஐயா. 69. அவள் அந்த விருந்தை தோல்வியடையச் செய்து கொண்டிருந்தாள், ஆனால் அந்த விருந்தைப் பற்றி யாருக்கு (நமக்கென்ன) அக்கறை? அவளோ இரட்சிக்கப்பட்டு கொண்டிருந்தாள், அவள் இயேசுவை அடைந்து கொண்டிருந்தாள். மேலும் அவள் அங்கே, அவரது பாதத்தை முத்தம் செய்து, அவருடைய பாதத்தைத் துடைத்து, அவளது கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரினால் அவரது பாதத்தை கழுவிக் கொண்டிருந்தாள், அவளால் தாங்க முடியவில்லை. சரியாக ஜீவ ஊற்றோடு இருந்து கொண்டு, அவரது பாதத்தை துடைத்துக் கொண்டிருந்தாள். தான் நடந்து கொண்ட வழியில் அவளுடைய உணர்வைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கு அவளுக்கு ஒன்றுமில்லை. அவள் இதற்கு முன்பு எந்த ஒரு மனிதன் முன்பும் இவ்வாறு நின்று, இவ்வாறு உணர்ந்ததில்லை என்பதில் ஆச்சரியமில்லை. அவளுடைய கன்னங்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அவள் அவரது பாதங்களைத் துடைத்துக் கொண்டேயிருந்தாள், அவள் அதில் தீவிரமாயிருந்தாள். அவள் அவருடைய பாதங்களைத் துடைத்துக் கொண்டேயிருந்தாள், [சகோ. பிரன்ஹாம் மீண்டும் முத்தமிடும் ஓசையை எழுப்புகிறார் - ஆசி]. அவள் பாதங்களை முத்தமிடுகிறாள். மேலும், இயேசு... 70. வேதாகமம், "குமாரனை முத்தஞ்செய்யுங்கள்" என்று கூறுகிறது. அது சரியா? அங்கே அவர்கள் அவருக்கு வரவேற்பின் முத்தத்தைத் தராமல், அவருடைய பாதங்களைக் கழுவாமல் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவளோ, அவரது பாதங்களைத் தனது கண்ணீரால் கழுவிக் கொண்டிருக்கிறாள். இயேசுவின் இயேசுவின் அழுக்கான பாதங்களைக் கழுவிய என்னே ஒரு அழகான தண்ணீர் அது! ஒரு மனந்திரும்பிய பாவியின் பளிங்கு கண்ணீர் துளிகளானது (crystal tears) கர்த்தராகிய இயேசுவின் பாதங்களைக் கழுவுகிறது. அல்லேலூயா! யாரோ ஒருவர் அவரை உபசரிக்கப் போகிறார். யாரோ ஒருவர் அவரிடம் வரப்போகிறார். தேவனுக்கே மகிமை! ஒரு மனந்திரும்பின பாவியின் கண்களிலிருந்து வந்த கண்ணீர் ஜீசுவின் (Jésus) பாதங்களைக் கழுவுவதை நான் நினைக்கும்போது, என்னுடைய இருதயம் அனல்கொள்கிறது. ஓ! என்னே! கழுவுவது எது? வெறுமனே சிறப்பானது அல்ல, சிறப்பானது அல்ல, அது உலகத்திலேயே மிகவும் சிறந்த தண்ணீர்... அப்போது இயேசு சிறிது நன்றாக உணர்ந்திருப்பார் (comfortable) என்று நான் நம்புகிறேன். தன்னை நேசிக்கிற ஒருவரோடு இருக்கும்போது, எப்பொழுதுமே அவர் அதிகமான நல்லுணர்வோடு இருக்கிறார். நீங்களும் எப்பொழுதுமே அவ்விதம் உணர்கிறீர்கள். 71. அவரது பாதங்களை அவள் கழுவிக் கொண்டிருந்த நிலையில், அவர் அங்கே இருந்தார். அவள் அவரது பாதங்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். மேலும் அவள், தன்னை மிகவும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்தாள். அவளது தலைமயிர் இந்தவிதமாக ஆகிவிட்டது. அவள் இந்தவிதமாக பாதங்களைக் கழுவி, முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். பின்னர் அவளது தலைமயிர் கீழ் நோக்கி விழும். அவள் தன் தலைமயிரை எடுத்து அவரது பாதங்களைத் துடைக்கத் துவங்குவாள். முத்தமிடுவாள், அவரது பாதங்களை துடைப்பாள். பின்னர் தலைமயிர் கீழே விழும். 72. இப்போது, அவளுடைய தலைமயிர் மட்டும் தான் அவளை குறித்ததான ஒரு நல்ல விஷயமாயிருந்தது. அவள் தலைமயிர். வேதாகமம், "ஒரு ஸ்திரீக்கு அவளது தலைமயிரானது அவளது மகிமைக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது" என்று கூறுகிறது. உங்கள் மகிமையைக் கத்தரிப்பது என்பது மிகவும் மோசமான ஒன்றாகும். அது சரிதான். நான் இன்னும் பழைய பாணியில், அது வேதாகமம் என்றும், அது சத்தியமானது என்றும் நம்புகிறவனாக இருக்கிறேன். நீங்கள் அதைச் செய்யும் போது மயிரைக் கத்தரிக்கும் போது) நீங்கள் தவறு செய்கிறீர்கள். அது உங்களை சற்று எரிச்சலூட்டலாம். அநேக பிரசங்கிமார்கள்... அவர்கள் என்னை வெளியே துரத்தினால், நான் வீதியில் சென்று பிரசங்கிப்பேன். மேலும் தேவன்... எப்படியும் அவ்வாறு செய்யப்போவதில்லை. 73. ஆனால், நான் உங்களுக்குச் சிலவற்றை கூறட்டும். இன்றிரவு, உங்களில் அநேக ஸ்திரீகள் அதைச் செய்துகொண்டு ஒரு மோசமான நேரத்தைப் பெற்றிருப்பீர்கள். அதைச் செய்வது உங்களுக்கு மிக எளிதானதாக ஆகிவிட்டது (you'd have to stand on your head to do it). உங்களுக்கு வெட்கம். வேதாகமம், "ஒரு ஸ்திரீக்கு தலைமயிரானது அவளுடைய மகிமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது" என்று கூறுகிறது. மேலும் எந்த ஒரு புருஷனுக்கும், தனது முடியை கத்தரிக்கின்ற அவனது மனைவியை தள்ளிவிடவும், விவாகரத்து செய்யவும் வேதாகமம் உரிமை கொடுக்கிறது. அது தான் வேதாகமம். அது கர்த்தர் உரைக்கிறதாவது. பண்டைய பாணியின் பயிற்சிகளுக்கு புறம்பாக நீங்கள் செல்வது மிகவும் மோசமானது ஆகும், இல்லையா? ஒரு பாடல் பாடுவது வழக்கம்; "நாம் தடைகளைத் தளர்த்தினோம்; பாவத்தோடு ஒத்துப் போய்விட்டோம்; நாம் தடைகளைத் தளர்த்தினோம்; செம்மறியாடுகள் வெளியேறின; ஆனால் வெள்ளாடுகள் உள்ளே வந்தது எப்படி?" நீங்கள் தடைகளைச் சற்று தளர்த்திப் பாருங்கள், அவ்வளவுதான். இங்கே அவள் தன்னுடைய மகிமையோடு இருக்கிறாள். அவள் எதைப் பெற்றிருந்தாள்? அவள் பெற்றிருந்த அனைத்தும் இயேசுவின் பாதத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவருடைய பாதத்தில் நீங்கள் பெற்றிருந்த அனைத்தையும்... உங்களுடைய மகிமை அனைத்தையும் வைக்கத்தக்கதான இடம் உங்களுக்கு கிடைக்கும் போதெல்லாம்... [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி]. எல்லாப் பணமும், அவள் பெற்றிருந்த அனைத்தும்... அவர் மீது நளத தைலம் ஊற்றப்பட்டது, அந்த புட்டி முழுவதும் அவர் மீது ஊற்றப்பட்டது. அவள் எதையும் மீதி வைக்கவில்லை. எல்லாவற்றையும் அவர் மீது ஊற்றிவிட்டாள். அந்த விதமாகத்தான் நீங்கள் அவரிடம் வந்தாக வேண்டும். அவருக்கே எல்லா துதிகளையும் செலுத்துங்கள்; எல்லா மகிமையையும் அவர் மேல் ஊற்றிவிடுங்கள்; எல்லாவற்றையும் அவருக்கென்று வைத்துவிடுங்கள். அல்லேலூயா! அதனால்தான் நாம் ஒரு எழுப்புதலைக்கூட பெற முடியவில்லை, ஏனெனில், நீங்கள் அதனோடு கஞ்சத்தனமாய் இருக்கிறீர்கள். ஆமென். நீங்கள் உங்கள் மகிமையில் சிறிதளவை வேறேதாவதுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள். உங்களுக்குத் தெரியுமா, செல்வி ஜோன்ஸ், இந்த விதமான உடைகளை உடுத்துகிறாள், அவள் இதைச் செய்கிறாள். ஓ, பரிசேயனே! நீங்கள் அந்தவிதமாக நடந்து கொண்டு, நீங்கள் யாரோ ஒருவரைப் போல காண்பித்துக் கொள்ள விரும்புகிறீர்கள். ஒரு எழுப்புதலால் இந்த தேசத்தை இயேசு அசைக்க முடியாமல் போனதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. 74. இன்றிரவு எனக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால் அது சத்தியமாயிருக்கிறது. மிகவும் கடினமாக, மிகவும் விறைப்பாக, மிகவும் குளிராக, மிகவும் அலட்சியமாக நீங்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள். நீங்கள் பிசாசுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள். அதுதான் உங்களால் முடியாததன் காரணம். அது சத்தியமாயிருக்கிறது. உங்களை நான் மீண்டும் காண முடியாமல் போனால், ஒரு சுத்தமான இருதயத்துடன் நியாயத்தீர்ப்பிலே நான் உங்களை சந்திப்பேன். இது சத்தியம் என்பது எனக்குத் தெரியும். அங்குதான் நீங்கள் நிற்கிறீர்கள். ஆனால் இந்த ஏழையோ அவருடைய பாதங்களைக் கழுவிக் கொண்டும், அவளுடைய மகிமையினால் துடைத்துக் கொண்டும் இருந்தாள். என்னே ஒரு ஸ்தலம்! என்னே ஒரு தருணம்! நான் அங்கே இருந்திருக்க அங்கே இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சரியாக அவள் நின்று கொண்டிருந்த அதே இடத்தில் நானும் நிற்க விரும்புகிறேன். ஓ, என்னே! அவருடைய பாதங்களைக் கழுவுவதும், தன்னுடைய மகிமையை எடுத்து அவருடைய பாதங்களைத் துடைப்பதும், கண்ணீர் வழிந்தோட, மனந்திரும்புதலின் பளிங்கு கண்ணீரினால் கழுவுவதற்குமான எப்பேற்பட்ட தருணத்தை அவள் பெற்றிருந்தாள்! அவள் அவைகளை துடைத்துக் கொண்டும், அவருடைய பாதங்களை முத்தமிட்டுக் கொண்டும், தன்னை அடக்கிக் கொள்ள கூடாதவளுமாயும் இருந்தாள். 75. "விருந்து என்ன ஆனது?" என்று நீங்கள் கேட்கிறீர்கள். விருந்து என்ன ஆனது என்பதைக் குறித்து யாருக்குக் கவலை? ஒரு பாவி தேவனிடம் வந்தாள். ஆமென். இன்று நமக்கு என்னவெனில், மிகவும் அதிகமான இருக்கும் தொல்லை அதின் அடிப்படையில் மதச்சார்புள்ள சம்பிரதாயங்களே. பாவிகள் தேவனிடம் வர முடியாது. அல்லேலூயா. ஓ, இந்த பரிதாபமான பாவி தனது கன்னங்களில் கண்ணீரானது வழிந்தோடுகிற மனந்திரும்பிய கண்ணீரோடு, அவருடைய பாதங்களின் மேல் சொட்டிக் கொண்டிருக்க, தனது கைகளால் அவைகளை கழுவி, தனது உதடுகளால் முத்தமிட்டு, தனது மகிமையை எடுத்து அவருடைய பாதங்களை துடைக்கிறாள். என்னே ஒரு அழகிய காட்சி! சரியாக அப்பொழுது இயேசு சௌகரியமாக உணர்ந்தார். 76. ஓ! பரிசேயனைக் குறித்து என்ன? ஓ! அந்த விருந்து நின்றுவிட்டது. நிச்சயமாக! தர்மசங்கடமான நிலைமை, ஓ, என்னால் அந்த பரிசேயனைப் பார்க்க முடிகிறது. அங்கேதான் அந்த பாவி, அந்த ஸ்திரீ அல்ல. பரிசேயனே அந்த பாவி. அவிசுவாசமே பாவம். அந்த ஸ்திரீ ஒரு விசுவாசியாக இருந்தாள். அந்தப் பரிசேயனோ மிகவும் பயபக்தியுள்ளவனாக இருந்தான். ஆனாலும், அவனே அந்த தேசத்தில் உள்ள மிகவும் மோசமான பாவியாக இருந்தான். இன்னமும் இந்த உலகமானது பெற்றுள்ள ஒரு மோசமான பாவி என்பது கடினமும், விறைப்பும், பின்மாற்றமுமுள்ள சபையே ஆகும், போதகரும் கூட அவ்வழியே. அல்லேலூயா. [சபையார் 'ஆமென்' என்கின்றனர் மொழி.] 77. இதன் பிறகு என்னை வெறுப்பீர்கள், ஆனால், தேவனே என்னை அவ்விதம் கூறும்படி சொல்லுகிறார். ஆமென், அதுதான் காரியம். அங்கே தான் காரியம். அந்த விறைப்பான ஒருவன்தான் அந்த பாவியாயிருக்கிறான். இந்த ஏழையான ஸ்திரீ அவரது பாதங்களைக் கழுவிய பிறகு... பரிசேயன் அங்கே நின்று கொண்டு... [சகோ. பிரன்ஹாம் அந்த பரிசேயன் செய்ததைப் போல சத்தத்தை செய்கிறார். (கவனத்தை ஈர்க்கும்படி கனத்த குரலில் இருமுதல்) - மொழி.] என்னே! அவனுடைய முகம் மிகவும் சிவந்து உதடுகளை சுற்றி வெண்மையாக மாறுவதை என்னால் காண முடிகிறது. ஓ! அவன் கோபமுறுகிறான். அவன், "இப்போது, ஜோன்ஸ் மற்றும் எல்லாரும் கவனியுங்கள். கவனித்தீர்களா? இந்த மனிதன் ஒரு தீர்க்கதரிசியாக அல்லது தன்னைக் குறித்து அவர் சொல்லுகிறபடி ஒரு முன்னுரைப்பவராக இருந்திருப்பாரானால், அந்த ஸ்திரீ எப்படிப்பட்டவள் என்பதை அறிந்திருப்பார், அவள் எப்படிப்பட்ட ஸ்திரீ என்பதை அறிந்திருப்பார்" என்றான். மேலும் அவன், "ஏன், அவள் அவரது நற்புகழைக் கெடுத்து விடுவாளே' என்றான். இயேசுவின் கீர்த்தி பாவிகளின் மத்தியில் உண்டாக்கப்படுகிறது. நிச்சயமாக, அவரை ஏற்றுக் கொள்ளுகிறவர்கள் அவர்கள் தான். கடினமான, விறைப்பான, அலட்சியமுள்ள மற்றும் பாரம்பரிய காரியங்களைப் படித்து, சுவிசேஷத்தை பிரசிங்கிப்பதாக அதைக் கூறி கொள்ளும் உங்களுக்கு முன்பாக அவருடைய கீர்த்தியானது உண்டாக்கப்பட்ட முடியாது. எப்படி உங்களோடு அவர் இந்த உலகத்திலே கீர்த்தியைப் பெற்றிருக்க முடியும்? சபையில் நீங்கள் உங்கள் புகழைப் பெற்றிருக்கிறீர்கள். ஆமென். 78. அங்கே தான் அவருடைய காரியம். அவன், "நீங்கள் பாருங்கள். அவர் காரியங்களை அறிவிக்கக் கூடியவராக இருப்பாரானால், அவர் ஒரு பெரிய மனிதனாக இருப்பாரானால், தன்னைத் தொடுகிற அந்த ஸ்திரீயானவள் ஒரு பாவி என்பதை அவர் அறிந்திருப்பார். பாருங்கள், அது அவரிடம் தான் உள்ளது" என்றான். என்ன நடந்தது? நாம் அதைக் காண்போம். ஓ, என்னே! அவள் தன்னை அடக்கிக் கொள்ள கூடாதவளாக இருந்தாள். இயேசு தம்முடைய பாதங்களை நகர்த்தியிருப்பாரா? இல்லை. அப்படியிருந்தால் அவள் குதித்தெழுந்திருப்பாள். அவரோ மிகவும் அமைதியாக உட்கார்ந்து கொண்டு அவளை கவனித்துக் கொண்டிருந்தார். அதைக் குறித்து அவர் மிகவும் நல்லவிதமாக உணர்ந்திருப்பார் என்று நான் நம்புகிறேன். அந்தப் பாவி மனந்திரும்புகிறதை அவர் கவனித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அவன், "நீங்கள் பாருங்கள், நீங்கள் பாருங்கள்" என்று கூறினான். இப்போது கவனியுங்கள். முதல் காரியம், அவர் சற்று இப்படியாக திரும்புகிறார். அவர் தமது தலையை உயர்த்தி, நோக்கிப் பார்க்கிறார். அந்த ஸ்திரீ தான் செய்வதை நிறுத்தி சற்று நிமிர்கிறாள். அவளுடைய முகத்தின் பக்கவாட்டில் அவளுடைய தலைமயிர் தொங்கிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். இயேசுவின் பாதத்திலிருந்த அழுக்குகள் மற்றும் தைலமானது அவளது முகத்திலும், உதடுகளிலும் பரவியிருப்பதை பாருங்கள். அவள் அவரை முத்தமிட்டுக் கொண்டு, அவருடைய பாதங்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். மேலும் அவள் நிற்கிறாள். அவளது கண்கள் பார்க்க ஆரம்பிக்கிறது. இயேசு ஏதோவொன்றை பேசும்படி நிர்ணயம் செய்கிறார். அவள் இயேசுவை நேராக நோக்கினாள். அவர் கீழே அவளைப் பார்த்தார். பின்னர், அவர் பரிசேயனை நோக்கிப் பார்த்தார். அவர், "சீமோனே! நான் உன்னிடம் ஒன்றை கூற வேண்டும்" என்றார். ஓ, என்னே! நியாயத்தீர்ப்பிலும் கூட அது என்னவாய் இருக்கும் என்பதை கவனியுங்கள். 79. "சீமோனே, நான் உனக்கு ஒரு காரியம் சொல்ல வேண்டும். டாக்டர் சீமோனே, இங்கே வரும்படி என்னை நீ அழைத்தாய். நீ அழைத்ததால்தான் நான் இங்கு வந்தேன், நான் இங்கு வந்தபோது என் பாதங்களைக் கழுவ நீ எனக்கு தண்ணீர் எதுவும் தரவில்லை. என் முகத்தையும், கைகளையும் தைலத்தால் ஒருபோதும் அபிஷேகிக்கவில்லை. சீமோனே, நீ என்னை முத்தமிடவுமில்லை. சீமோனே, நீ என்னை நேசிக்கவில்லை. நீ என்னை நேசித்திருந்தால், என்னுடைய பாதங்களை நீ கழுவி இருப்பாய். நீ என்னை நேசித்திருந்தால், என்னை அபிஷேகித்திருப்பாய். நீ என்னை நேசித்திருந்தால், அபிஷேகித்திருந்தால், நீ என்னை முத்தமிட்டிருப்பாய்; ஆனால் நீ என்னை ஒருபோதும் வரவேற்கவில்லை." ஓ! அந்த பரிசேயன், பெரிய பருமனான, கொழுகொழுத்த... இன்றைக்கும் அவ்விதமே உள்ளது. "ஓ! எல்லா பட்டங்களுடனுமா?" ஆமாம். அவர், "நீ என்னை முத்தமிடவில்லை," என்றார். ஓ! நான் அவரை முத்தமிட விரும்புகிறேன். "குமாரன் கோபங்கொள்ளாமல் இருக்கும்படி அவரை முத்தஞ் செய்யுங்கள்" என்று வேதம் கூறியுள்ளது. அவரை முத்தஞ் செய்யுங்கள். அவர், "நீ என்னை முத்தமிடவில்லை. ஆனால் இந்த ஏழை ஸ்திரீ, உள்ளே வந்தது முதற்கொண்டு, ஓயாமல் என் பாதங்களை முத்தஞ்செய்தாள்; அவளது கண்ணீரால் அதைக் கழுவினாள்; அவளது தலைமயிரினால் அதைத் துடைத்தாள்" என்றார். ஓ, தேவனே! "இந்த சிறிய ஸ்திரீ, அவளது கண்ணீரால் என் கால்களைக் கழுவினாள். அவளது கைகளினால் - தலைமயிரினால் துடைத்தாள். அவள் முத்தமிட்டாள், என் கன்னத்தையல்ல, என் பாதத்தை முத்தமிட்டாள்." 80. அவள் நின்று கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளது கண்கள் செய்வதறியாது பார்த்துக் கொண்டிருக்கிறது. பிறகு அவர் திரும்பி அவளைப் பார்த்தார். ஓ! என்னே! அவர், "நான் அவளுக்குச் சொல்கிறேன், 'அவளுடைய பாவங்கள் அநேகமாய் இருந்தன. அவையனைத்தும் அவளுக்கு மன்னிக்கப்பட்டன" என்றார். [சகோ. பிரன்ஹாம் 'அவளுடைய பாவங்கள் அநேகமாய் இருந்தன. அவையனைத்தும் அவளுக்கு மன்னிக்கப்பட்டன' என்பதை தழுதழுத்த குரலில் சொல்கிறார். பின்னர் சகோ. பிரன்ஹாம் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறார். சபையார் தேவனுக்கு துதி செலுத்துகின்றனர் மொழிபெயர்ப்பாளர்]. அதைத்தான் அவர் என்னிடமும் கூறவேண்டும் என்று விரும்புகிறேன். "அவளது பாவங்கள் அநேகம். அவை அனைத்தும் மன்னிக்கப்பட்டன...?..." என்னால் இதற்குமேல் பிரசங்கிக்க முடியவில்லை. 81. நாம் ஒரு நிமிடம் நம் தலைகளைத் தாழ்த்துவோம். [ஒரு சகோதரர் அந்நிய பாஷை பேசுகிறார் - ஆசி] நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? சகோதரனே, நியாயத்தீர்ப்பிலே உங்களோடு அவர் என்ன செய்யப் போகிறார்? நீங்கள் மிகுந்த பயபக்தியுடையவர்களாக எப்போதும் இருக்கலாம். அவர் சொல்வதைக் கேட்பதைவிட... இந்த உலகத்திற்கு அவர் சொல்வதை... 57. நான் அங்கே நிற்க விரும்புகிறேன். நான் அங்கே இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். "நல்லது... அருமையும் உத்தமுமான என் ஊழியக்காரனே, அது நன்றாக செய்யப்பட்டுள்ளது. நீ நம்பிக்கைக்குரியவனாய் இருந்தாய். கடமையின் பாதையில் நின்றாய்; நீ எதையுமே தவிர்த்துவிடவில்லை. நீ சத்தியத்தைக் கூறினாய். அது எதை எடுத்துக்கொண்டாலும், நீ சத்தியத்தையே கூறினாய். இப்போது அது நன்றாக செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறுவதைக் கேட்க ஒருநாள் நான் அவரருகில் நிற்க விரும்புகிறேன். அதைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு சிறப்பு வாய்ந்த காரையோ (car), சிறந்த ஸ்தானத்தையோ எதிர்பார்க்கவில்லை. எனக்கு அவர் வேண்டும். யார் உன்னைப் பற்றி என்ன சொன்னாலும், அது ஒரு பொருட்டல்ல. 82. நான் ஆச்சரியமடைகிறேன்... நமது தலைகளை ஒரு நிமிடம் தாழ்த்தின நிலையில்... ஆர்கன் வாசிப்பவரே, தயவுகூர்ந்து எங்களுக்கு ஒரு சிறு சுரத்தை வாசிக்க முடியுமா? அந்த ஸ்திரீயைப் போன்று வேறு யாராவது ஒரு நபர் இன்றிரவு இங்கே இருப்பார்களா என்று ஆச்சரியப்படுகிறேன். அவ்வாறு இல்லாமல் இருக்கலாம்... நீங்கள் ஒரு வேசியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதைவிட அதிகமாக அளவில் ஒரு வேசியாக இருக்கலாம். விபச்சாரம் என்பது எப்போதுமே பாலுறவு சம்பந்த விஷயத்தை மட்டுமே குறிப்பதல்ல. நீ உனது செய்யலாம். உன்னுடைய நேரத்தை வேசித்தனம் விசுவாசத்தோடு வேசித்தனம் செய்யலாம்; வெளியே போய், பாரம்பரியத்தில் சேர்ந்து கொள்ளலாம்; அல்லது குளிர்ந்துபோன, நீ சம்பிரதாயமான சபையோடு சேர்ந்து கொள்ளலாம்; நீ ஒரு வேசியாக இருக்கிறாய். நீ வேசியாகவே இருக்கிறாய். அந்த குற்ற உணர்ச்சியோடு ஸ்திரீயைப் போலவே நீங்களும் இருக்கிறீர்கள்; ஆனால், அவளை மன்னித்த அதே கர்த்தராகிய இயேசு, இன்றிரவு உனக்காகவும் பரிந்து பேசுகிற இரக்கத்தோடு இருக்கிறார். 83. இந்த பிரசங்க பீடத்தண்டை ஒரு நிமிடம் நீங்கள் இங்கு வந்து நிற்பீர்களா? யாராவது இங்கே பீடத்தண்டை நடந்து வந்து, "கிறிஸ்துவை எனது இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்" என்று கூறுகிறீர்களா? முதலாவது உங்கள் கரங்களை உயர்த்த முடியுமா? "சகோ. பிரன்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள்" என்று சொல்லுங்கள். 84. இந்தக் கட்டிடத்தில் பாவியான ஒருவர் கூட இல்லையா? தேவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும். ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும். தேவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும். சகோதரனே, தெய்வீக சுகமளித்தலை நீங்கள் விரும்புகிறீர்கள், இல்லையா? நிச்சயமாக மீன்.... அப்பங்களும் மீன்களும். (loaves and fishes -உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள் என்றும் பொருள்படும் மொழி.). ஆனால் அவரிடம் சென்றடைய வேண்டும் என்று வரும்போது, ஓட்டுக்குள் உங்களை பின்னால் இழுத்துக் கொள்கிறீர்கள். மீண்டுமாக வழுவிச் செல்ல முனைகிறீர்கள். ஓ! அவர்கள், "நல்லது, எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது" என்கிறார்கள், (ஆனால்) ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இரவு முழுதும் மருத்துவ அவசர ஊர்தியின் எச்சரிப்பு ஒலியை (siren) நான் கேட்கிறேன். ஒவ்வொரு முறையும் கல்லறையை நீங்கள் கடந்து செல்லும்போது, உங்களுடைய வரிசை எண் அங்கே இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்பால் நித்தியம் இருக்கிறது, என்றாவது ஒரு நாள் அவருக்கு முன்பாக நீங்கள் நிற்கப் போகிறீர்கள். அப்போது உங்களால் மனந்திரும்ப முடியாது. அதைச் செய்வதற்கான நேரம் இப்பொழுதே, உங்கள் கைகளை உயர்த்தி, "தேவனே, என் மேல் இரக்கமாயிரும். இயேசுவை என்னுடைய இரட்சகராக இப்பொழுதே ஏற்றுக் கொள்கிறேன்" என்று கூறுங்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, பையனே! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே! யாரோ ஒருவர் உங்கள் கைகளை உயர்த்தி, "தேவனே, என் மேல் இரக்கமாயிரும். இன்று இயேசு எனக்கு வேண்டும்" என்று கூறுகிறீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. மகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தாயாரே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது? பால்கனியில் அங்கு மேலே இருப்பவரே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக; ஆம்! சகோதரனே, நான் உங்களை காண்கிறேன். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக இளம்பெண்ணே! தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, ஐயா தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 85. ஓ, நீங்கள் தவறுகள் செய்திருக்கலாம் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர் உங்களை நேசிக்கிறார். விரித்த கரங்களோடு அவர் நிற்கிறார், நீங்கள் வரும்படியாய் விரும்புகிறார். நீங்கள் இருக்கும் வண்ணமாகவே வாருங்கள். சகோதரியே! உங்களை மேலே பால்கனியில் பார்க்கிறேன். உங்களை நான் காண்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதை ஒருபோதும் மறவாதீர். அழுக்கான பாதங்களோடு இருந்த அதே இயேசுவிடம்தான் உங்கள் கரங்களை உயர்த்தியிருக்கிறீர்கள். அநேக வருடங்களுக்கு முன்பாக அது நடந்தது. என் அருமை சகோதரியே, சகோதரனே, இந்த நகரத்தில் சரியாக இங்கே, இன்றிரவு அது நடக்கிறது, ஓ, அங்கே...?... அவர் கூறினதை அவர்கள் எண்ணிப் பார்க்க விரும்பவில்லை. எனக்குத் தெரியும். நான் உங்களிடத்தில் இருந்திருந்தால், நான் நேராக அவரிடம் நடந்து, "கர்த்தராகிய இயேசுவே, என் பாவங்களை எனக்கு மன்னியும். நான் அந்த அழுக்கை நீக்கி விடுகிறேன். நிந்திக்கப்பட்ட சிலரோடு நானும் கர்த்தருடையவர்கள் இணைந்து கொள்கிறேன். நான் அதை செய்கிறேன்" என்று கூறுவேன். 86. கரங்களை உயர்த்தாதிருக்கிற வேறு யாராவது இருப்பீர்களானால், உங்கள் கரங்களை உயர்த்தி, "இயேசுவே, இதோ நான். இப்போது நான் வருகிறேன்" என்று கூறுங்கள். அங்கே இருக்கும் உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக, ஐயா! இங்கே இருக்கும் சிறிய பெண்ணே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 87. இன்னும் வேறு யாராவது உங்கள் கரங்களை உயர்த்தி இருக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரனே. நீங்கள் விசுவாசித்து, இங்கே இந்த கட்டிடத்தில் சுகமாக்கும் ஆராதனையில் தேவன் எப்படி வியாதியுள்ளவர்களை சுகமாக்கினார் என்பதையும், உங்கள் இருதயத்தின் இரகசியங்களை அறிந்திருக்கிறார் என்பதையும் கவனித்தீர்களானால்... இங்கே ஒரு டஜன் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் உங்கள் கரங்களை உயர்த்தியிருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். அது எனக்கு தெரியும். ஓ, நீங்கள் நீங்கள் ஒரு கிறிஸ்தவன் என்பதாக உரிமை கோரலாம், ஆம், ஆனால் அதைப் பற்றி நான் பேசவில்லை. பரிசேயனும் கூட அப்படிச் செய்தான். நான் உங்களுக்கு ஒரு அழைப்பைக் கொடுக்கிறேன். உங்கள் தலைகள் தாழ்த்திய நிலையில், பியானோ அல்லது ஆர்கன் வாசிக்கப்படும்போது தங்கள் கரங்களை உயர்த்தின ஒவ்வொருவரும், அதைச் செய்யாத ஒவ்வொருவரும் ஜெபத்திற்காக இங்கே வந்து ஒரு நிமிடம் நிற்பீர்களா? உங்கள் இருக்கைகளை விட்டு வருவீர்களா? நேரே இங்கே வந்து, சற்று இங்கே நில்லுங்கள். குருடரின் கண்களை திறப்பதற்கும், பார்வையே இல்லாதவர்களுக்கு பார்வை கொடுக்கவும், துன்பப்படுகிறவர்களுக்கும், செவிடருக்கு கேட்கும் திறனைக் கொடுக்கவும் எனது ஜெபத்தை தேவன் கேட்பாரானால், அவர் அப்படி செய்வாரானால், நிச்சயமாக அவர் உங்கள் ஆத்துமாவையும் சுகமாக்குவார். இன்றிரவு என்னுடைய ஆத்துமா அசைக்கப்பட்டுள்ளது. ஓ, அவர் இங்கே இருக்கிறார். 88. சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது, அங்கேயே எழுந்து நில்லுங்கள். "நான் எல்லாவற்றையும் ஒப்புக்கொடுக்கிறேன், என்னுடைய ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகருக்காக எல்லாமுமே, நான் எல்லாவற்றையும் ஒப்புக்கொடுக்கிறேன்." சரியாக இங்கே வருவீர்களா? இதன் பக்கவாட்டில் நிற்க முடியுமா? இந்த அழைப்பு எப்பொழுதுமே இனி கிடைக்கப் பெறாத கடைசி தருணமாக இது இருக்கலாம். ஒருவேளை உங்களுக்கு இனிமேல் அல்லது எப்பொழுதுமே இதை செய்யக் கூடாமல் போகலாம். மிக விரைவில் உங்களுக்கு இது பாதையின் முடிவாகக் கூட இருக்கலாம். நீங்கள் ஏன் இப்போதே வரக்கூடாது? நேராக இங்கே வந்து நிற்கக்கூடாது? 89. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, மகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உன்னால் முடியுமானால் இங்கேயே நில். வேறு யாராவது? சிறு பையனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஏறக்குறைய பன்னிரண்டு வயதுள்ள இந்த சிறு பையன் கீழே வருவதைப் பாருங்கள். வயதான உங்களில் சிலருக்கு வெட்கம் உண்டாகட்டும்! உங்கள் இருதயம் உணர்ச்சியற்றும், அழுக்காயும், இருண்டும் உள்ளது. 98% மக்கள் தங்கள் 21-வது வயதிற்கு முன்பதாகவே இரட்சிக்கப்பட்டுவிட்டனர் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. நீங்கள் உங்கள் வழிகளில் அவ்வாறு இருந்து கொண்டு, நீங்கள் சரியாக உள்ளீர்கள் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். "செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு." நீங்கள் வருவீர்களா? உங்கள் வழிகளை இங்கே பீடத்தண்டைக்கு கொண்டு வர மாட்டீர்களா? இங்கே முழங்காலில் உள்ளவர்களைப் பாருங்கள். இங்கே வாருங்கள். இளம் பெண்ணே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. மேலே பால்கனியில் உங்கள் கரங்களை உயர்த்தி இருப்பவர்களே, கீழே வருவீர்களா? என்றாவது ஒரு நாள் எப்படியாயினும் நீங்கள் இயேசு கிறிஸ்துவிடம் தலை தாழ்த்தப் போகிறீர்கள், அதே இயேசு கிறிஸ்துவிடம் வரும்படி நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். ஒன்று நீ பாவியாக மரிக்கப் போகிறாய், அப்போது இரக்கம் இல்லை, இரக்கம் இருக்காது... இதுவே இரக்கத்தின் நாள். ஞாபகம் கொள்ளுங்கள். ஒரு நாளானது மற்றொன்றை சந்திக்கும்போது, அந்த நாள்...?... மேலும் இந்த இரக்கத்தின் நாளானது இயேசு கிறிஸ்துவை சந்திக்கும் போது, அதன் பிறகு அது நியாயத்தீர்ப்பின் நாளாய் இருக்கும், அது சரியே. 90. கீழே நேரே வாருங்கள், அது சரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான்கு இளம் பிராயத்தினர் கர்த்தரிடம் வருகிறார்கள். ஆமென். சகோதரனே, சகோதரியே, உங்கள் பாவங்கள் என்னவாக இருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல. உங்களை மன்னிக்க இயேசு இங்கே இருக்கிறார். அந்தச் சிறிய - சிறிய பெண் வருகிறாள், அவசரமாக, பீடத்தண்டைக்கு வருகிறாள். அவ்வாறுதான் வர வேண்டும். அந்தவிதமாகத்தான் வர வேண்டும். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அது அருமையானது. உங்களில் மற்ற அநேகருக்கு சரியாக இங்கே வர வேண்டும் என்ற அவசியம் உள்ளது, வரமாட்டீர்களா? தனது கரத்தை உயர்த்திய சகோதரனைக் குறித்து என்ன? நீங்கள் உண்மையில் அதைச் செய்தீர்கள், அப்படித்தானே சகோதரனே? நீங்களும் அப்படித்தானே, சகோதரியே? நீங்கள் உண்மையில் அதைச் செய்தீர்கள், இல்லையா? அப்படியானால் கீழே வாருங்கள், பீடத்தண்டையில் வந்து எங்களோடு முழங்காற்படியுங்கள். அவ்வாறு செய்வீர்களா? கர்த்தராகிய இயேசு உங்களுடைய ஒவ்வொரு பாவத்தையும் மன்னிப்பார் என்பதை நான் உங்களுக்கு வாக்கு கொடுக்கும் வேளையில், நீங்கள் முன்னே வாருங்கள். வருவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 91. அநேகர் பால்கனியிலிருந்து கீழே வருகிறார்கள், அது நல்லது. சரியாக கீழே வாருங்கள். உங்களுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். சரியாக கீழே வாருங்கள். இப்போதே வாருங்கள், பீடத்தை சுற்றிலும் போதுமான இடம் இருக்கிறது; ஊற்றண்டையில் எனக்கு ஒரு இடம் இருக்கிறது, போதுமான இடம் இருக்கிறது. சரியாக இப்பொழுதே வெளியே வாருங்கள். கைகளை உயர்த்திய சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அவர்கள் பின்புறத்திலே அவருக்கு உதவி செய்தார்கள். தேவனே இரக்கமாயிரும். அதுதான் வழி. நேராக வாருங்கள். சாத்தான் உங்களைப் கொள்ளையாட விடாதீர்கள். வெளியே உள்ள கூட்டம், மற்றும் இன்றைய உலகமானது உங்களை கொள்ளையாட விடாதீர்கள். வாருங்கள், சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நேராக அவரை சந்திக்க வாருங்கள். 92. இப்பொழுது மெதுவாக பாடுங்கள். "நான் - நான் எல்லாவற்றையும் ஒப்புக்கொடுக்கிறேன்." சகோ. கோர்டன் (Gordon) எனக்கு உதவி செய்வீர்களா? உங்களால் முடிந்தால். [அந்த சகோதரன் பாடும்போது சகோ. பிரன்ஹாம் பேசுகிறார் மொழி.] நீங்கள் வந்து உங்களுக்குண்டான எல்லாவற்றையும் அவருக்கு கொடுக்க மாட்டீர்களா? உங்கள் எல்லா கஷ்டங்களையும், உங்கள் எல்லா இயலாமையையும் கொடுங்கள். எல்லாரும் வந்து... ?... எல்லாம் உமக்கே என் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரே, நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன் நீங்கள் நிஜமாகவே கூறுகிறீர்களா? உங்கள் சபையை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்க நீங்கள் தயாரா? ஒரு நட்புறவாக (friendship) மாறும்படி உறுப்பினர் உரிமையை (membership) ஒப்படைப்பீர்களா? பரலோகத்தில் எழுதப்பட்ட உங்களுக்கான நிரூபத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளும் பொருட்டு,(இங்கே) உங்கள் நிரூபத்தை ஒப்படைப்பீர்களா? நீங்கள் அதை செய்வீர்களா? இன்றிரவு இங்கே வந்திருக்கும் இந்த புருஷனையும் அவரது மனைவியையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதிலும் செய்த எல்லாவற்றிலும், கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொள்ளும்படி இப்பொழுது இங்கே வருவதுதான் மிகப்பெரிய காரியம் ஆகும். எவ்வளவு அற்புதமானது! எவ்வளவு ஆச்சரியமானது! 93. இயேசு, "என்னிடத்தில் வருபவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு" என்று கூறினார். இன்னும் வேறு யாராவது இருக்கிறார்களா...?... வாருங்கள். தொடர்ந்து வாருங்கள், ஆம், நீங்கள் தான், அது சரியே, அது நீங்கள் தான், வாருங்கள். ஆமென். உங்களில் இன்னும் அநேகரும் கூட வாருங்கள். நாங்கள் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் வருவீர்களா? நான் எல்லாவற்றையும் ஒப்படைக்கிறேன் என்னுடைய ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரே எல்லாம் உமக்கே நான் எல்லாவற்றையும் ஒப்படைக்கிறேன் 94. "என்னை முற்றிலுமாக உமக்குக் கொடுக்கிறேன். எனக்கு உள்ள எல்லாவற்றையும், என்னுடைய எல்லா பெருமையையும், எனக்குண்டான எல்லாவற்றையும் இந்த பீடத்தில் எல்லாவற்றையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். அன்பான தேவனே, என்னிடத்தில் இரக்கமாயிரும்; என்னுடைய கண்ணீரானது கறைகளை கழுவட்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன். உம்முடைய இரத்தமானது என்னுடைய கறைகளை கழுவட்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன்." எது அதைச் செய்யும்? இயேசுவின் இரத்தமேயன்றி வேறொன்றுமில்லை. நாங்கள் இன்னும் சற்று கூடுதலாக காத்துக் கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் வருவீர்களா? ஏனெனில், அவ்வாறு நிர்பந்தப்படுவதாக உணர்கிறேன். நான் ஒரு மதவைராக்கியம் கொண்டவனல்ல என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் அறிவீர்கள். அதை இப்பொழுது இந்த பீடத்தைச் சுற்றி நின்று கொண்டிருக்க ஆனால், சரியாக வேண்டியதான அநேக மக்கள் இன்னும் இருப்பதாக நான் உணர்கிறேன். 95. பின்மாற்றம் அடைந்தவரே, உங்களை குறித்து என்ன? தேவனிடத்தில் இருந்து விலகியே இருக்கிறீர்கள். நீங்கள் மரித்துப்போனால், நீங்கள் இழக்கப்பட்டு போவீர்கள். வாருங்கள். இதுதான் உங்கள் தருணம்; உள்ளே வந்து விடுங்கள், உங்களுக்கு இடம் உள்ளது. நீங்கள் வர மாட்டீர்களா? நாம் மீண்டும் ஒரு முறை பாடுவோம்; "நான் எல்லாவற்றையும் ஒப்படைக்கிறேன்" என்று பாடும் வேளையில் இன்னும் யாராவது வர இருக்கிறீர்களா? நல்லது. நான் எல்லாவற்றையும் ஒப்படைக்கிறேன் நான் எல்லாவற்றையும் ஒப்படைக்கிறேன் என் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகராக உமக்கு எல்லாமே நான் எல்லாவற்றையும் ஒப்படைக்கிறேன் நான் எல்லாவற்றையும் ஒப்படைக்கிறேன் நான் எல்லாவற்றையும் ஒப்படைக்கிறேன் என் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரான உமக்கு எல்லாமே நான் எல்லாவற்றையும் ஒப்படைக்கிறேன் நீங்கள் அப்படி செய்வீர்களா? நீங்கள் பரிசுத்த ஆவியை நாடுகிறீர்களா? உங்களை நிரப்பும்படி அவர் சரியாக இங்கே இருக்கிறார். உங்களுக்கு பரிசுத்த ஆவியை அருளும்படி, உங்களை ஆசீர்வதிக்கும்படி அவர் இங்கே இருக்கிறார். உங்களுக்கு அது தேவையா? எல்லாம் உமக்கே, என் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரே, நான் எல்லாவற்றையும் ஒப்புக்கொடுக்கிறேன். நீங்கள் எல்லாரும் வந்து விட்டீர்களா? நிச்சயமாகவா? இங்கே இன்னும் சிலர் இருக்கிறார்கள். "நான் இருக்கும் வண்ணமாகவே" என்ற பாடலை பாடுவோம். சகோதரியே, "நான் இருக்கும் வண்ணமாகவே" என்ற பாடலுக்கு சுரத்தை தாருங்கள். நீங்கள் என்ன செய்திருந்தாலும் பரவாயில்லை. பரிந்துரை ஏதுமின்றி வெறுமனே நான் இருக்கையில், எனக்காகவே உம்முடைய இரத்தம் சிந்தப்பட்டது, வா என்று என்னை அழைத்தீர் ஓ, தேவாட்டுக் குட்டியே வந்தேன், வந்தேன் நாம் எல்லோரும், அந்தப் பாடலை பாடும்போது எழுந்து நிற்போமாக. இப்போதே நடைபாதையின் வழியாக வாருங்கள். பரிந்துரை ஏதுமின்றி வெறுமனே நான் இருக்கையில், எனக்காகவே உம்முடைய இரத்தம் (இப்பொழுதே வருவீர்களா?), சிந்தப்பட்டது (சரியாக பீடத்தண்டை வாருங்கள்...?... கீழே வாருங்கள். ஓ, வாருங்கள்) வா என்று என்னை அழைத்தீர் தேவாட்டுக் குட்டியே வந்தேன், வந்தேன் வெறுமனே நான் இருந்துகொண்டு காத்திராமல் (கவனியுங்கள்) என் ஆத்துமாவை விடுவிக்க... (எத்தனை பேர்?) ஒரு இருண்ட கறையிலிருந்து, உம்மிடம், ஒவ்வொரு கறையையும் சுத்தப்படுத்தும் இரத்தத்திடம், ஓ, தேவாட்டுக் குட்டியே வந்தேன், வந்தேன் 96. மெதுவாக, இப்பொழுது, சகோதரியே. நாம் இதை முனகி பாடும் போது நமது தலைகளை தாழ்த்துவோமாக. (சகோ. பிரன்ஹாம் முனங்க துவங்குகிறார் - ஆசி.) எங்கள் பரலோக பிதாவே, இப்போது இந்த பீடத்தை சுற்றி அநேக பாவிகள் உள்ளனர். அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் பாதத்தண்டையில் வணங்கி இருக்கிறார்கள். நீர் சொல்லியிருக்கிறீர், "பிதா ஒருவனை இழுத்துக் கொள்ள கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். வருகிற எல்லோருக்கும் நான் நித்திய ஜீவனை கொடுத்து, கடைசி நாட்களில் அவர்களை எழுப்புவேன்." கர்த்தாவே, நீர் இதை வாக்களித்திருக்கிறீர். உம்முடைய பாதத்தில் நின்று கொண்டு, உமக்கு ஒரு சேவை செய்து கொண்டிருந்த அந்த பாவப்பட்ட வேசியைப் போல, கர்த்தாவே, இங்கே அநேகர் நின்று கொண்டிருக்கிறார்கள். மேலும், நீர் திரும்பி அவளைப் பார்த்து, "உன்னுடைய பாவங்கள் அநேகமாயிருந்தது. அவையெல்லாம் மன்னிக்கப்பட்டன" என்றீர். நீர் ஒரு நபரை பொருத்து மதிப்பு தருவதில்லை. கர்த்தாவே, இவர்களுக்கும் நீர் அப்படியே செய்வீர். இன்றிரவு அதைத் தந்தருளும்படியாக நான் ஜெபிக்கிறேன். அநேகர் பீடத்துக்கு வெளியே அங்கே இருக்கிறார்கள், கர்த்தாவே, அவர்கள் இங்கு வந்து இன்றிரவு தங்கள் ஆத்துமாக்களை அர்ப்பணித்திருக்க வேண்டியவர்கள். அவர்கள் தேவனை விட்டு விலகி இருக்கின்றனர். அவர்கள் விறைப்புடனும், அலட்சியத்துடனும் உள்ளனர். அவர்கள் சம்பிரதாயமான காரியங்களைப் பெற்றுக் கொண்டு உம்மை விட்டு விலகி இருக்கிறார்கள். இந்த வாரம் அவர்கள் இந்த பட்டிணத்திற்கு வருகை தந்து, மரித்தோரிலிருந்து நீர் எழுந்துள்ளீர் என்பதை வகையில் அடையாளங்களையும், நிரூபணம் செய்யும் அதிசயங்களையும், அற்புதங்களையும் நீர் செய்கிறதையும் அவர்கள் கண்டுள்ளனர். இங்கே இன்றிரவு விரித்த கரங்களோடு நீர் நின்று கொண்டிருக்கிறீர். தேவனே, நான் உம்மை நினைக்கும் பொழுது, நீர் - நீர் என் இருதயத்தை சுக்கு நூறாக கிழிக்கிறீர். நீர் இங்கே நிற்கிறீர், ஜனங்களை கெஞ்சிக் கொண்டும், பரிந்து பேசிக் கொண்டும் இருக்கிறீர். 98. ஓ, தேவனே இன்றிரவு எனக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆனால், தேவனே நீர் அழைக்கிற இங்குள்ள யாராக இருந்தாலும், இன்றிரவு அவர்கள் உம்மை கண்டுக்கொள்ளாமல் வெளியே செல்லக்கூடாது என்று நான் ஜெபிக்கிறேன். ஏதோ ஒரு காரணத்தினிமித்தம் என்னுடைய இருதயம் ஆழமான பாரத்துடன் உள்ளது. எனக்குத் தெரியவில்லை. நான் ஜெபிக்கிறேன், அன்பார்ந்த இயேசுவே, இன்னும் ஒரு முறை நான் கூப்பிடுகிறேன். அந்த நபர், ஏற்கெனவே இந்த பீடத்தில் இல்லாதிருக்கும் பட்சத்தில், அவர்கள் சீக்கிரம் வரட்டும் கர்த்தாவே. இதை அருளும். இதுவே அவர்களுக்கு கடைசி அழைப்பாக இருக்கலாம், ஏதோ காரணத்துக்காக என் இருதயத்தை வருத்தப்படுத்தியுள்ளீர். மேலும் இயேசுவின் நாமத்தினால் நீர் இதை தந்தருளும் என்று ஜெபிக்கிறேன். 99. ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருங்கள். இருப்பீர்களா? ஏதோ தவறாக இருப்பதாக, ஒரு விநோத உணர்வு இன்றிரவு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. எங்கேயோ ஏதோ தவறாக உள்ளது. என்ன தவறாக உள்ளது? வாருங்கள். ஒவ்வொருவரும் உங்கள் இருதயத்தை தேடுங்கள். நாம் மீண்டும் ஒரு முறை பாடும்போது, என்ன தவறாக உள்ளது என்பதை கண்டுபிடியுங்கள். நாங்கள் பாடுகையில் இப்போது வாருங்கள். தேவன் யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார். அது எனக்குத் தெரியும்...?... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ...காத்திராமல் என் ஆத்துமாவை ஒரு இருண்ட கறையிலிருந்து விடுவிக்க, உம்மிடம், ஒவ்வொரு கறையையும் சுத்தப்படுத்தும் இரத்தத்திடம், ஓ, தேவாட்டுக் குட்டியே வந்தேன், வந்தேன் நான் இருக்கும் வண்ணமாகவே, நீர் ஏற்றுக் கொள்வீர்! வரவேற்பீர், மன்னிப்பீர், சுத்திகரிப்பீர், விடுவிப்பீர் ஏனெனில் விசுவாசிக்கிறேன் நான் உம் வாக்கை ஓ, தேவாட்டுக் குட்டியே வந்தேன், வந்தேன் நாம் அடுத்த சரணத்தை கடைசியாகப் பாடும் போது, ஊழியர்கள் இங்கு சுற்றிலும் வந்து, நீங்கள் விரும்பினால் எங்களோடு ஜெபிக்கும்படி விரும்புகிறேன். இந்த சபையின் தலைவர் பண்டைய பாணியிலான பீட அழைப்பில் நம்பிக்கை உள்ளவர். இங்கே & இருபது, முப்பது ஜனங்கள் முழங்காற்படியிட்டுள்ளனர், பாவிகள் தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பி முழங்காற்படியிட்டுள்ளனர். நீங்கள் வர விரும்பினால், பீடத்தை சுற்றிலும் நின்று, அவர்களுடன் ஜெபியுங்கள். · அவ்வாறு செய்வீர்களா? நாங்கள் அடுத்த சரணத்தைப் பாடும் போது, இப்போது நீங்கள் வருவீர்களா? தங்கள் இருதயத்தில் ஆத்துமாக்களின் பாரம் கொண்ட எதாவது கிறிஸ்தவ ஊழியர்? உங்களிடம் அது இல்லையென்றால், அதை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் நீங்கள் அதைப் பெற்றிருக்க வேண்டும் என்பதை தேவன் அறிந்திருக்கிறார். 100. ஒரு உண்மையான பண்டைய பாணியிலான பெந்தெகொஸ்தே (அனுபவத்தை) உண்டுபண்ணும்படிக்கு, இன்றிரவு உங்களை வரும்படி சவால் - கட்டளையிடுகிறேன். பின்னர் நாளை இரவு சுகமளிக்கும் ஆராதனையில் தேவன் என்ன செய்கிறார் செய்கிறார் என்பதை கவனியுங்கள். நீங்கள் இந்த காரியத்தை சரிசெய்து கொள்ளுங்கள்...... இந்த காரியத்தை சரிசெய்து, பின்னர் தேவன் என்ன செய்வார் என்பதை கவனியுங்கள். நீங்கள் வெறுமனே அதைச் செய்யுங்கள். நான் உங்களுக்கு சவாலிடுகிறேன். நான் இவ்விதமாக எப்போதும் செய்வது கிடையாது ஆனால் ஏதோவொன்று அதை செய்கிறது, ஏதோ ஒன்று என்னை அசைக்கிறது. நான் மிகவும் நிர்பந்திக்கப்படுவதாக உணர்கிறேன். மேலும், இந்த அழைப்பில் நான் மிகவும் ஆர்வம் உள்ளவனாக இருக்கிறேன். பீடத்தைச் சுற்றிலும் ஏகமாக இன்னும் அதிகமானோர் இங்கிருக்க வேண்டும் என்று உணர்கிறேன், அது இன்னும் என் இருதயத்தை பாரமடையச் செய்கிறது. மேலும் நான் தேவனுடைய ஊழியனாக இருக்கும் பட்சத்தில், தேவனிடம் இருந்து இது வருகிறது என்பதை அறிந்தவனாயிருந்து, இதை நான் இயேசுவின் நாமத்தில் கூறுகிறேன். முக்கியமானதாக இல்லாதிருக்கும் பட்சத்தில் இதை நான் கூற மாட்டேன் என்பது உங்களுக்கு தெரியும். ஏதோ தவறு உள்ளது. நாங்கள் இன்னும் ஒருமுறை பாடும் சமயத்தில், நீங்கள் வரவேண்டும் என்று விரும்புகிறேன். உதவி செய்வோர் மற்றும் பிறர், பாவிகள் மற்றும் இப்பொழுது ஜெபிக்க விரும்புகிற எல்லோரும் பீடத்தை சுற்றிலும் கூடி வாருங்கள். இன்னும் ஒரு முறை பாட எனக்கு உதவி செய்வீர்களா? நான் இருக்கும் வண்ணமாகவே, நீர் ஏற்றுக் கொள்வீர்! வரவேற்பீர், மன்னிப்பீர், சுத்திகரிப்பீர், விடுவிப்பீர் ஏனெனில் விசுவாசிக்கிறேன் நான் உம் வாக்கை ஓ, தேவாட்டுக் குட்டியே வந்தேன், வந்தேன் 101. அன்பார்ந்த பரலோக பிதாவே, இங்கே மினியாபோலிஸ்-ல் எனக்குத் தெரிந்த மட்டில், கர்த்தாவே, சிறப்பானதை நான் செய்திருக்கிறேன். கர்த்தாவே, இன்றிரவில் இருந்து ஒரு வருடம் கழித்து நான் திரும்பி வரும்போது, இங்கு அமர்ந்துள்ள அநேகர் நித்தியத்தில் ஏற்கனவே சென்றிருப்பார்கள் என்பதை அறிந்தவனாய், உணர்ந்தவனாய், தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல் எல்லாவற்றையும் முழுமையாக அறிவித்தேன். கர்த்தாவே, நான் அறிந்திருக்கிறேன், ஏனெனில் நான் உம்மை காண்கிறேன். நீர் அவர்களை நேசிக்கிறீர் என்று நான் அவர்களுக்கு சொன்னேன். அநேக வருடங்களுக்கு முன்பு, அன்றிரவு அந்தப் பெண்மணிக்கு நீர் செய்தது போலவே, இவர்கள் மேலும் அதே மதிப்பை நீர் பெற்றிருக்கிறீர். அநேகர் பீடத்தைச் சுற்றிலும் இருந்து கொண்டு, கர்த்தாவே இங்கே இப்பொழுது தங்கள் கண்ணீரினால் இப்பீடத்தை கழுவிக் கொண்டிருக்கிறார்கள். தேவனே, இக்கட்டிடத்தில் எப்படியாவது பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு தீவிரமாக வந்து சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமையை இங்குள்ள ஒவ்வொருவர் மேலும் பொழிந்தருளும்படி, அன்பான தேவனே நான் வேண்டிக்கொள்கிறேன். இதை அருளும். ஓ, அவர்கள் தங்கள் கல்லான இருதயங்களை உடைத்து, வந்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இரட்சிக்கப்படட்டும். நாம் நமது நமது கைகளை உயர்த்துவோமாக. தேவனிடத்தில் நம்முடைய கரங்களை உயர்த்துவோம். ஒவ்வொருவரும் இப்பொழுது தேவனிடம் ஜெபத்தை ஏறெடுப்போம். சகோ. கோர்டான் இங்கே வாருங்கள், வந்து ஜெபத்தில் எங்களை வழிநடத்தும். சகோ. கோர்டான் (Bro. Gordon) (ஜெபத்தில் வழி நடத்துகையில் கிறிஸ்துவை இப்போது பெற்றுக் கொள்ளுங்கள்.